ரிக்கி என்ன பண்றிங்க.. அவரை சீண்டாதீங்க.. ஆஸி அணியிலும் இந்த பலவீனம் இருக்கு.. பிரட் லீ எச்சரிக்கை

Brett Lee 2
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நாயகன் விராட் கோலி டெஸ்ட் போட்டிகளில் கடந்த 5 வருடங்களில் 3 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். அது நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்க முக்கிய காரணமாக அமைந்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய மண்ணில் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது.

அந்த நிலையில் விராட் கோலியின் ஃபார்ம் கவலையை கொடுப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் ரிக்கி பாண்டிங் சமீபத்தில் கூறியிருந்தார். எனவே ஆஸ்திரேலியாவில் பெரிய ரன்கள் குவித்து விராட் கோலி தம்முடைய தரத்தை நிரூபிக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்திருந்தார். அதற்கு இந்திய கிரிக்கெட்டை பற்றி பேச பாண்டிங் யார் என்று பயிற்சியாளர் கௌதம் கம்பீர் பதிலடி கொடுத்தார்.

- Advertisement -

பிரட் லீ அதிருப்தி:

மேலும் ஆஸ்திரேலியாவில் விராட் கோலி, ரோஹித் சர்மா ஆகியோர் அசத்துவார்கள் என்றும் அவர் ஆதரவு தெரிவித்திருந்தார். இந்நிலையில் விராட் கோலியை இப்படியெல்லாம் சொல்லி சீண்டாதீர்கள் என ரிக்கி பாண்டிங் மீது முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளார். மேலும் ஆஸ்திரேலிய அணியிலும் பேட்டிங் கொஞ்சம் பலவீனமாக இருப்பதாக அவர் கூறியுள்ளார்.

இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு. “இது மோசமான நகர்வு ரிக்கி. நீங்கள் என்ன செய்கிறீர்கள்? நீங்கள் விராட் கோலியை நெருப்பாக மாற்ற முயற்சிக்கிறீர்கள். உலகத்தரம் வாய்ந்த வீரரான அவர் இங்கே நெருப்பாக விளையாடலாம். இது சிறந்த தொடராக இருக்கக்கூடும். ஏற்கனவே இந்தியா ஏ அணி பந்தை சேதப்படுத்தியதாக சில சர்ச்சைகளும் ஏற்பட்டுள்ளது. தற்போது விராட் கோலி பற்றி ரிக்கி பாண்டிங் இது போன்ற கருத்தை சொல்லியுள்ளார்”

- Advertisement -

ஆஸ்திரேலியாவின் பலவீனம்:

“நம்மிடம் ஸ்டார்க், கமின்ஸ், ஹேசல்வுட், லயன் ஆகியோர் அடங்கிய உலகத்தரம் வாய்ந்த பவுலிங் அட்டாக் இருக்கிறது. இதை விட உங்களுக்கு சிறந்த பவுலர்கள் கிடைக்க மாட்டார்கள். ஆனால் வரலாற்றிலேயே நம்முடைய பேட்டிங் கொஞ்சம் பலவீனமாக இருக்கிறது. மெக்ஸ்வீனி அழுத்தத்தின் கீழே விளையாட வருவார். ஏனெனில் அவர் துவக்க வீரராக இதற்கு முன் விளையாடியதில்லை. கவாஜா தற்சமயத்தில் சிறப்பாக விளையாடக்கூடும்”

இதையும் படிங்க: நியூஸிலாந்திடம் தோற்க இதான் காரணம்.. ரோஹித்தை அட்டாக் செய்வாங்க.. இந்தியா கம்பேக் கொடுக்கும்.. பிரட் லீ

“லபுஸ்ஷேன் நீண்ட நாட்களாக ஸ்மித் போலவே ஃபார்மில் இல்லை. எனவே நம்முடைய பேட்டிங் எப்படி அழுத்தத்தை சமாளிக்க போகிறது என்பதை பார்க்க வேண்டும். குறிப்பாக இங்குள்ள வேகத்துக்கு சாதகமான ஆடுகளங்களில் ஜஸ்ப்ரித் பும்ரா தலைமையிலான இந்திய பவுலிங் அட்டாக் நமக்கு அழுத்தத்தை கொடுக்கலாம்” என்று கூறினார். இதை அடுத்து இத்தொடரின் முதல் போட்டி நவம்பர் 22ஆம் தேதி துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement