நியூஸிலாந்திடம் தோற்க இதான் காரணம்.. ரோஹித்தை அட்டாக் செய்வாங்க.. இந்தியா கம்பேக் கொடுக்கும்.. பிரட் லீ

Brett Lee
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இந்திய கிரிக்கெட் அணிகள் மோதும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடர் நவம்பர் 22ஆம் தேதி துவங்குகிறது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் விளையாடிய 2 தொடர்களையும் இந்தியா முதல் முறையாக வென்று சரித்திரம் படைத்தது. ஆனால் 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்குச் செல்ல இம்முறை ஆஸ்திரேலியாவில் குறைந்தது 4 போட்டிகளை வென்றாக வேண்டிய கட்டாயத்திற்கு இந்தியா தள்ளப்பட்டுள்ளது.

ஏனெனில் சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராக சொந்த மண்ணில் இந்தியா ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்து மோசமான சாதனை படைத்தது. இந்நிலையில் சொந்த மண்ணில் எப்படியும் வென்று விடலாம் என்ற அதிகப்படியான தன்னம்பிக்கையால் இந்திய அணி நியூசிலாந்திடம் வீழ்ந்ததாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிரட் லீ கூறியுள்ளார். ஆனால் அதே தவறை இந்திய அணி ஆஸ்திரேலியாவிலும் செய்யாது என்று அவர் கூறியுள்ளார்.

- Advertisement -

அட்டாக் செய்வாங்க:

ஏனெனில் கம்பீர் தலைமையில் இந்திய அணி நன்றாக பயிற்சி எடுத்து கவனத்துடன் ஆஸ்திரேலியாவில் விளையாடும் என்று அவர் தெரிவித்துள்ளார். இது பற்றி பிரட் லீ பேசியது பின்வருமாறு. “அடுத்தடுத்து நீங்கள் பின்னடைவை சந்திக்கும் போது உங்கள் மீது அழுத்தம் ஏற்படும். அதனால் தற்போது விராட் கோலி ரோஹித் சர்மா போன்றவர்கள் மீண்டும் வரைபடத்திற்கு செல்வார்கள் என்று நம்புகிறேன்”

“அவர்கள் தங்களுடைய டெக்னிக்கில் வேலை செய்து புத்துணர்ச்சியுடன் ஆஸ்திரேலியாவில் உள்ள களத்திற்கு வருவார்கள். ஆனால் அங்கே ஆஸ்திரேலிய வேகப்பந்து வீச்சாளர்கள் ரோஹித் சர்மாவை புதிய பந்தால் அட்டாக் செய்வார்கள். நியூசிலாந்துக்கு எதிரான தொடர் மிகவும் எளிதாக இருக்கும் என்று அவர்கள் சென்றார்கள். நியூசிலாந்து அணியை இங்கே அவமரியாதை செய்யவில்லை”

- Advertisement -

இந்தியா கம்பேக் கொடுக்குமா:

“ஏனெனில் இந்தியா தங்களுடைய சொந்த மண்ணில் வலுவான அணியாகும். ஆனால் நியூஸிலாந்து அணி இந்தியாவை வீழ்த்தியது. அந்த தோல்வி இந்திய வீரர்களுக்கு நல்ல பாடமாகும். அதன் காரணமாக அவர்கள் ஆஸ்திரேலியாவுக்கு நன்கு தயாராகி புரிதலுடன் வருவார்கள். அதனால் அவர்கள் வலுவாக கம்பேக் கொடுப்பார்கள்”

இதையும் படிங்க: இன்றைய 3 ஆவது டி20 போட்டிக்கான இந்திய அணியில் ஏற்படவுள்ள முக்கிய மாற்றம் – புதிய வீரருக்கு வாய்ப்பு

“அந்த தோல்வியால் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடமிருந்து இந்திய வீரர்களுக்கு ஒரு எச்சரிக்கை கிடைத்திருக்கும். இந்தியா மோசமாக விளையாடிருந்தாலும் இப்போதும் சாம்பியன் அணி. கடந்த 2 வாரங்களாக அவர்கள் வீழ்ச்சியடைந்தனர். கிரிக்கெட்டில் இது போன்ற விஷயங்கள் நடக்கும்” என்று கூறினார். மொத்தத்தில் ஆஸ்திரேலியாவில் வென்று 2025 உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் ஃபைனலுக்கு இந்தியா தகுதி பெறுமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement