- Advertisement -
இந்திய கிரிக்கெட்

ஆஸியை மிரட்ட அவர் இல்லாம போய்ட்டாரு.. பும்ரா மத்தவங்களை விட மைல் தொலைவில் இருக்காரு.. பிரட் லீ பாராட்டு

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணிக்கு நடைபெற்று வரும் பார்டர் – கவாஸ்கர் கோப்பை தொடரில் இந்தியாவின் ஜஸ்ப்ரித் பும்ரா மிகப்பெரிய சவாலை கொடுத்து வருகிறார். குறிப்பாக சிராஜ் உள்ளிட்ட மற்ற இந்திய பவுலர்கள் தடுமாறி வருகிறார்கள். ஆனால் தன்னுடைய தனித்துவ திறமையால் ஆஸ்திரேலியாவுக்கு சவால் கொடுக்கும் பும்ரா இதுவரை நடைபெற்ற 3 போட்டிகளில் 21* விக்கெட்டுகளை எடுத்து இந்தியாவின் வெற்றிக்கு போராடி வருகிறார்.

குறிப்பாக முதல் போட்டியில் மட்டும் 8 விக்கெட்டுகள் எடுத்த அவர் கேப்டனாக 295 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெறுவதற்கு முக்கிய பங்காற்றி ஆட்டநாயகன் விருது வென்றார். அதனால் ஐசிசி தரவரிசையில் உலகின் நம்பர் ஒன் டெஸ்ட் பவுலராக முன்னேறிய பும்ரா மொத்தமாக ஆஸ்திரேலிய மண்ணில் 10 டெஸ்ட் போட்டிகளில் 53* விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார்.

- Advertisement -

பிரட் லீ பாராட்டு:

அதன் வாயிலாக ஆஸ்திரேலிய மண்ணில் அதிக டெஸ்ட் விக்கெட்டுகள் எடுத்த ஆசிய பவுலர் என்ற ஜாம்பவான் கபில் தேவ் வாழ்நாள் சாதனையை உடைத்துள்ள அவர் புதிய சாதனையும் படைத்துள்ளார். இந்நிலையில் ஜஸ்ப்ரித் பும்ரா உலக கிரிக்கெட்டில் மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சாளர் என்று ஆஸ்திரேலிய ஜாம்பவான் பிரட் லீ பாராட்டு தெரிவித்துள்ளார். மேலும் தற்சமயத்தில் உள்ள மற்ற பவுலர்களை விட பும்ரா மிகவும் தொலைவில் சிறந்த பவுலராக இருப்பதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.

அப்படிப்பட்ட அவருடன் முகமது ஷமி இருந்திருந்தால் இத்தொடரில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை தெறிக்க விட்டிருக்கும் என்றும் பிரட் லீ கூறியுள்ளார். இது பற்றி அவர் பாக்ஸ் ஸ்போர்ட்ஸ் தொலைக்காட்சியில் பேசியது பின்வருமாறு. “ஜஸ்ப்ரித் பும்ரா உலகத்தரம் வாய்ந்தவர். துரதிஷ்டவசமாக இந்திய அணியில் ஷமி இல்லை. சிராஜை கொஞ்சம் தடுமாற்றமாக சுற்றியிருந்தாலும் பும்ரா நன்றாக பந்து வீசியுள்ளார்”

- Advertisement -

முன்னோக்கி பும்ரா:

“என்னுடைய கருத்துப்படி இந்திய அணி சில நல்ல வேகப்பந்து வீச்சாளர்களுடன் நல்ல அட்டாக்கை கொண்டுள்ளது. ஆனாலும் ஜஸ்ப்ரித் பும்ரா சுமையை சுமக்கிறார் என்று மக்கள் சொல்கிறார்கள். அந்தளவுக்கு பும்ரா மிகவும் நன்றாக பந்து வீசுகிறார். அவர் மற்ற பவுலர்களை விட மிகவும் அதிக மைல்கள் தொலைவில் முன்னோக்கி இருக்கிறார்”

இதையும் படிங்க: 80 ரன்ஸ்.. அம்பயரின் அரிதான முடிவால்.. வெ.இ அணிக்கு எதிராக வங்கதேசம் வரலாறு காணாத வெற்றி

“இது உலகில் விளையாடும் மற்ற பவுலர்களுக்கு அவமரியாதையாக சொல்லவில்லை. ஆனால் ஜஸ்ப்ரித் பும்ரா அந்தளவுக்கு நன்றாக செயல்படுகிறார்” என்று கூறினார். முன்னதாக முதல் போட்டியில் வென்ற இந்தியாவை 2வது போட்டியில் ஆஸ்திரேலியா தோற்கடித்த நிலையில் 3வது போட்டி டிராவில் முடிந்தது. அதனால் 4வது போட்டியில் வெற்றி காணும் முனைப்புடன் இந்திய அணி தயாராகி வருகிறது.

- Advertisement -