நான் விளையாடிய காலத்தில் எனக்கு எதிராக விளையாடிய சிறப்பான 2 பேட்ஸ்மேன்கள் இவர்கள்தான் – பிரெட் லீ தேர்வு

Lee
- Advertisement -

உலகிலேயே தலைசிறந்த வேகப் பந்து வீச்சாளர்களில் ஒருவராக திகழ்ந்த ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான ப்ரெட் லீ, தான் விளையாடிய கால கட்டத்தில் தனக்கு பிடித்தமான இரண்டு டெஸ்ட் பேட்ஸ்மேன்களாக இந்திய அணியின் முன்னாள் வீரரான சச்சின் டெண்டுல்கரையும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரான ப்ரையன் லாராவையும் குறிப்பிட்டுள்ளார். சச்சின் டெண்டுல்கர் திறைமையான பேட்ஸ்மேன் என்று கூறிய அவர் ப்ரையன் லாரா பலதரப்பட்ட ஷாட்களை விளையாடுவதில் வல்லவர் என்றும் குறிப்பிட்டு பேசியுள்ளார். இது குறித்து பேசிய அவர்,

Lee

- Advertisement -

சச்சின் டெண்டுல்கரும் பிரையன் லாராவும்தான், நான் விளையாடிய காலகட்டத்தில் எனக்கு பிடித்த இரண்டு டெஸ்ட் பேட்ஸ்மேன்கள். இதில் ப்ரையன் லாரா அசாத்தியமான ஷாட்களை ஆடுவதில் வல்லவர் என்று பேசிய அவர், சச்சின் டென்டுல்கரின் பேட்டிங்கைப் பற்றி பேசியதாவது, நாம் எந்த இடத்தில் பந்து வீசுகிறோம் என்பதை கணித்து அதற்கேற்றார்போல் ஷாட்களை ஆடுவதில் சச்சின் வல்லவர்.

ஷாட் பால்களை வீசினால் கட் அடித்துவிடுவார், அவுட் சைட் பந்துகளை வீசினால் எக்ஸ்ட்ரா கவர் திசையில் அடித்து விடுவார். இப்படி ஒவ்வொரு பந்துக்கும் ஏற்றார்போல் அந்தந்த ஷாட்களை ஆடும் திறமை சச்சினிடம் உள்ளது. ஆனால், அவர் அப்படி விளையாடியதால் பந்து எங்கு ணெல்லப் போகிறது என்பது நமக்கு முன்கூட்டியே தெரிந்து விடும்.

Lara

எனவே அந்த பந்துகளை எளிதாக தடுத்து விடலாம் என்று பேசிய அவர், ப்ரையன் லாரா பற்றி குறிப்பிடும்போது,ஆறு பந்துகளையும் ஒரே இடத்தில் வீசினாலும், அந்த பந்துகளை எல்லாம் வெவ்வேறு திசைக்கு அடிக்கும் அசாத்திய திறைமை உடையவர் ப்ரையன் லாரா. ஒரே இடத்தில் வீசும் பந்துகளை அவரால், கட் ஷாட்டும் ஆட முடியும்,

Lara 1

அதே பந்தை மறுபடியும் வீசினால் அதனை பின் பக்கமாகவும் அவரால் அடிக்க முடியும் என்று அவர் கூறிய அவர், ப்ரையன் லாரா எப்போதுமே யூகிக்க இயலாத ஒரு பேட்ஸ்மேனாகவே இருந்தார் என்றும் அவர் அந்த பேட்டியில் கூறியிருக்கிறார்.

Advertisement