கேப்டன்சி மோதலில் ஈடுபட்டு அவருடன் இருந்த அழகான நட்பை இழந்தேன்: பிரெண்டன் மெக்கல்லம் வேதனை

Mccullum
- Advertisement -

2011 ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை வென்றது. இந்த தொடரில் தோல்வியடைந்த நியூசிலாந்து அணியின் கேப்டன் டேனியல் வெட்டோரி நியூசிலாந்து கேப்டனாக தனது பதவியை துறந்தார். உடனடியாக ராஸ் டைலர் கேப்டனாக நியமிக்கப்பட்டார்.

Mccullum

- Advertisement -

இதுகுறித்து பேசியுள்ள பிரண்டன் மெக்கல்லம் : இந்த கேப்டன் பதவியால் எனக்கும் டெய்லருக்கும் இடையே உள்ள நட்பை பாதித்தது. ராஸ் டைலர் உடன் இளமைக்கால முதல் கிரிக்கெட் ஆடி வருகிறேன். நான் அண்டர் 19 அணிக்கு கேப்டனாக இருக்கும் போது எனக்கு துணைக் கேப்டனாக இருந்தார் என்று கூறியுள்ளார்.

மேலும் 2012 ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக நடந்த டெஸ்ட் தொடர் தோல்வி, தென் ஆப்பிரிக்க தொடர் தோல்வி ,இந்திய அணிக்கு எதிரான தோல்வி, மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான தோல்வி ஆகியவற்றை தொடர்ந்து ராஸ் டைலர் கேப்டன்சி கேள்வி எழுப்பப்பட்டது.

taylor 1

மேலும் அவருக்கும் பயிற்சியாளருக்கும் கொஞ்சம் உரசல் ஏற்பட்டது. இதன்பின்னர் கேப்டன்சிக்காக நாங்கள் இருவரும் நேர்காணலுக்கு சென்றோம். நியூசிலாந்து கிரிக்கெட்டை எவ்வாறு வழிநடத்த போகிறோம் என்பதற்கான திட்ட வரைபடத்தை நாங்கள் கொடுக்க வேண்டும். அப்போது நான் சரியாக செய்தேன்.

- Advertisement -

அப்போது மட்டும் நான் போட்டி போடாமல் ராஸ் டைலரிடம் கேப்டன்சியை கொடுங்கள் என்று கூறியிருக்கலாம். இப்படி செய்திருந்தால் பிரச்சனையை இருந்திருக்காது. இது நியூசிலாந்து கிரிக்கெட்டிற்கு கறை ஆகிவிட்டது.

Taylor

தற்போது வரை எங்களுக்குள் நட்பு இல்லை. ஆனால் இருவருக்கும் இடையே பரஸ்பர மரியாதை இருக்கிறது என்று கூறியுள்ளார். பிரண்டன் மெக்கல்லம். 2015 ஆம் ஆண்டு பிரண்டன் மெக்கல்லம் தலைமையிலான அணி உலக கோப்பை இறுதிப்போட்டிக்கு சென்றது குறிப்பிடத்தக்கது.

Advertisement