IND vs ENG : ஒற்றை செய்கையால் அமர்ந்த இடத்திலிருந்தே இந்திய வீரரை காலி செய்த மெக்கல்லம், மாஸ்டர் பிளான் இதோ

Mccullum-and-Shreyas
- Advertisement -

இங்கிலாந்துக்கு எதிராக அதன் சொந்த மண்ணில் நடைபெற்று வரும் 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் கடைசி போட்டி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. கடந்த வருடம் துவங்கிய 5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் 4 போட்டிகளில் முடிவில் 2 – 1* என்ற கணக்கில் இந்தியா முன்னிலை வகித்த போது ரத்து செய்யப்பட்ட கடைசி போட்டி கடந்த ஜூலை 1-ஆம் தேதியன்று பர்மிங்காமில் துவங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா கடும் போராட்டத்துக்கு பின் 416 ரன்கள் குவித்தது. ஏனெனில் புஜாரா, கில், விராட் கோலி, ஷ்ரேயஸ் ஐயர் என 5 முக்கிய வீரர்கள் சொற்ப ரன்களில் அவுட்டானதால் 98/5 என மோசமான தொடக்கத்தைப் பெற்ற இந்தியாவுக்கு 6-வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்து 222 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்த பண்ட் – ஜடேஜா ஆகியோர் இந்தியாவைக் காப்பாற்றினார்.

அதில் டி20 இன்னிங்ஸ் போல 19 பவுண்டரி 4 சிக்ஸருடன் சதமடித்து 146 (111) ரன்கள் குவித்து ரிஷப் பண்ட் ஆட்டமிழக்க அவருடன் நங்கூரமாக மெதுவாக பேட்டிங் செய்த ஜடேஜா 13 பவுண்டரியுடன் சதமடித்து 104 ரன்களில் அவுட்டானார். இறுதியில் ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஒரே ஓவரில் 35 ரன்களை பறக்கவிட்ட கேப்டன் ஜஸ்பிரித் பும்ரா உலக சாதனை படைத்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக ஜேம்ஸ் ஆண்டர்சன் 5 விக்கெட்டுகளை எடுத்தார்.

- Advertisement -

தடுமாறிய இந்தியா:
அதை தொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து பேட்ஸ்மேன்கள் இந்தியாவின் தரமான பந்துவீச்சில் சொற்ப ரன்களில் அவுட்டானதால் அந்த அணி 284 ரன்களுக்கு சுருண்டது. கேப்டன் பென் ஸ்டோக்ஸ், ஜோ ரூட் உட்பட முக்கிய வீரர்கள் ஏமாற்றிய அந்த அணிக்கு அதிக பட்சமாக அதிரடியாக விளையாடிய ஜானி பேர்ஸ்டோ சதமடித்து 106 ரன்கள் குவித்தார். இந்தியா சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக முகமது சிராஜ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 132 ரன்களை முன்னிலை பெற்ற இந்தியா 400 ரன்களை இலக்காக நிர்ணயிக்கும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 2-வது இன்னிங்சில் மோசமாக பேட்டிங் செய்து 245 ரன்களுக்கு சுருண்டது.

முக்கியமான தருணத்தில் கில், விராட் கோலி, விஹாரி, ஷரேயஸ் ஐயர் என முக்கிய பேட்ஸ்மேன்கள் 2-வது முறையாக மீண்டும் சொற்ப ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு பின்னடைவை கொடுத்தனர். இருப்பினும் அனுபவத்தை காட்டிய தொடக்க வீரர் புஜாரா அரைசதம் அடித்து அதிகபட்சமாக 66 ரன்கள் எடுக்க அவருடன் நிதானமாக பேட்டிங் செய்த ரிஷப் பண்ட் அரைசதம் அடித்து 57 ரன்களில் ஆட்டமிழந்தார். இங்கிலாந்து சார்பில் பந்துவீச்சில் அதிகபட்சமாக கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4 விக்கெட்டுகளை எடுத்தார். அதனால் 378 என்ற இலக்கைத் துரத்தி வரும் இங்கிலாந்து சற்று முன்பு வரை 100/0 என்ற நிலையில் இந்தியாவுக்கு அச்சுறுத்தலை கொடுக்கும் வகையில் பேட்டிங் செய்து வருகிறது.

- Advertisement -

வலையில் ஷ்ரேயாஸ்:
முன்னதாக இந்த முக்கிய போட்டியில் வாய்ப்பு பெற்ற இளம் இந்திய வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் முதல் இன்னிங்சில் 15 ரன்களில் அவுட்டான நிலையில் 2-வது இன்னிங்சிலும் 19 ரன்களில் அவுட்டாகி இந்தியாவுக்கு கைகொடுக்க தவறினார். ஆனால் அவர் அவுட்டான விதம்தான் பல இந்திய ரசிகர்களையும் கடுப்பாக வைத்துள்ளது. ஆம் சுரேஷ் ரெய்னா போன்ற பெரும்பாலான இந்திய வீரர்கள் ஷார்ட் பிட்ச் பந்துகளில் தடுமாறி ஆட்டமிழப்பது வழக்கமான ஒன்றாகும்.

ஏனெனில் வேகத்துக்கு கைகொடுக்காத இந்திய ஆடுகளங்களில் சுழல் பந்துவீச்சை அதிகமாக எதிர்கொண்டு வளர்ந்த இந்திய பேட்ஸ்மேன்களில் விராட் கோலி, ரோகித் சர்மா போன்ற ஒருசிலரை தவிர பெரும்பாலானவர்கள் உயரமான வெளிநாட்டு வேகப்பந்து வீச்சாளர்கள் வீசும் ஷார்ட் பிட்ச் பந்துகளை எதிர்கொள்ளும்போது தடுமாறுவார்கள்.

- Advertisement -

அந்த பிரச்சனை இவருக்கும் உள்ளது. சமீபத்திய தென் ஆப்பிரிக்க டி20 தொடரில் அதுபோன்ற பந்துகளில் ஆட்டமிழந்த அவரை விரைவாக முன்னேறுமாறு முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் எச்சரிக்கை விடுத்திருந்தார். ஆனால் அதற்காக மெனக்கெடாத அவர் இந்த முக்கிய போட்டியில் இளம் இங்கிலாந்து பவுலர் மாட்டி போட்ஸ் வீசிய ஷார்ட் பிட்ச் பந்தில் மீண்டும் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.

உட்கார்ந்து கொண்டே:
இதற்கு இங்கிலாந்தின் புதிய பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ள பிரண்டன் மெக்கல்லம் மாஸ்டர் பிளான் போட்டதை ரசிகர்கள் பார்க்க முடிந்தது. அவர் அவுட்டாவதற்கு முன்பாக பெவிலியனில் உட்கார்ந்திருந்த அவர் ஸ்ரேயாஸ் அய்யர் பேட்டிங் செய்ய வந்ததும் ஷார்ட் பந்துகளை வீசுமாறு சைகை செய்தார். அதைப் பன்பற்றிய இங்கிலாந்து பவுலர்கள் கச்சிதமாக வலையை விரித்து ஸ்ரேயாசை காலி செய்தனர்.

இதையும் படிங்க : நல்லவேளை ரஹானே மாதிரி காணாம போயிடுவாரோன்னு நெனைச்சோம் – அரைசதம் அடித்து தப்பிய இந்திய வீரர்

சமீபத்திய ஐபிஎல் 2022 தொடரில் கொல்கத்தாவின் பயிற்சியாளராக இருந்த பிரெண்டன் மெக்கல்லம் அந்தத் தொடரை முடித்துவிட்டுதான் இங்கிலாந்தின் பயிற்சியாளராக பொறுப்பேற்றுள்ளார். ஐபிஎல் தொடரின் போது ஸ்ரேயாஸ் அய்யர் ஷார்ட் பிட்ச் பந்துகளுக்கு தடுமாறுவார் என்பதை நன்கு தெரிந்து வைத்திருந்த அவர் தற்போது கச்சிதமாக அதை பயன்படுத்தி இங்கிலாந்துக்கு சாதகமாக நடந்து கொண்டது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

Advertisement