பேட்டிங் விளையாடுனான இவரை மாதிரிதா அதிரடியா விளையாடனும் – இளம் வீரரை புகழ்ந்த மெக்கல்லம்

Mccullum

இந்த ஆண்டின் ஐபிஎல் தொடரானது கடந்த ஏப்ரல் மாதம் 9ஆம் தேதி தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வந்துகொண்டிருந்த நேரத்தில், தொடரில் பங்கேற்று இருந்த சில வீரர்களுக்கும், அணி நிர்வாக ஊழியர்களுக்கும் கொரானா தொற்று ஏற்பட்டதை அடுத்து நடப்பு ஐபிஎல் தொடரை காலவரையின்றி ஒத்திவைத்திருக்கிறது, இந்திய கிரிக்கெட் நிர்வாகமான பிசிசிஐ. மொத்தம் 60 போட்டிகள் நடக்க வேண்டும் என்றிருந்த இத்தொடரில் 29 போட்டிகள் மட்டுமே முடிந்துள்ளது. மீதமிருக்கும் 31 போட்டிகளை எங்கே? எப்போது நடத்துவது என்பதை பற்றி ஆலோசனைகள் நடைபெற்று வரும் இந்த சமயத்தில், வெளிநாட்டு வீரர்களை பத்திரமாக அவர்களின் நாட்டுக்கு அனுப்பும் ஏற்பாடுகளையும் செய்து தந்திருக்கிறது பிசிசிஐ.

IPL

இதற்கிடையில் இத்தொடரில் நடைபெற்று முடிந்துள்ள போட்டிகளில் வீரர்களின் செயல்பாடுகள் மற்றும் அவர்களின் திறமைகளை பற்றி பல்வேறு முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்துக்களை தெரிவத்து வரும் சூழ்நிலையில், நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி துவக்க ஆட்டக்காரர் மற்றும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளருமான ப்ரென்டன் மெக்கல்லம் இந்த தொடர் குறித்த தனது கருத்தினை தெரிவித்துள்ளார் .

- Advertisement -

டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்காக ஓப்பனிங்கில் பேட்டிங் ஆடிய இளம் வீரர் ப்ரித்வி ஷாவைப் பற்றி தனது பாராட்டினை தெரிவித்துள்ள அவர் இணையதளத்தில் இந்த கருத்தை குறிப்பிட்டிருந்த ப்ரென்டன் மெக்கல்லம், அதில் கூறியிருப்பதாவது : இந்தத் தொடரில் ப்ரித்வி ஷா விளையாடியதை நாம் அனைவரும் பார்த்தோம். நாம் அனைவருமே அவர் எப்படி விளையாடினாரோ அதேபோல் விளையாடத்தான் ஆசைபடுவோம். ஒரு வீரரால் அனைத்து பந்துகளையும் பவுண்டரி மற்றும் சிக்ஸர்களாக அடித்து விட முடியாது.

Shaw-3

ஆனால் டெல்லி அணியில் ப்ரித்வி ஷாவிற்கு வழங்கப்பட்ட சுதந்திரமே அவர் ஒவ்வொரு பந்தையும் பவுண்டரிக்கோ அல்லது சிக்ஸருக்கோ அடிக்க வேண்டும் என்ற முயற்சியை மேற்கொள்ள வைத்திருக்கிறது. அவர் அப்படிதான் விளையாட வேண்டுமென்று டெல்லி அணி விரும்புவதால்தான் அவரை அந்த இடத்திலிருந்து மாற்றாமல் வைத்திருக்கிறது டெல்லி அணி என்று கூறியிருக்கிறார்.
இத்தொடரின் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்ஸ் அணி எதிர்கொண்டபோது, கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பௌலரான ஷிவம் மாவியின் ஓவரில் தொடர்ச்சியாக ஆறு பவுண்டரிகளை ப்ரித்வி ஷா அடித்ததோடு மட்டுமல்லாமல், அந்த பாணியிலேயே அந்த அணியின் அனைத்து பௌலர்களின் ஓவர்களையும் விளாசித் தள்ளினார்.

- Advertisement -

shaw-2

இந்த போட்டியில் ப்ரித்வி ஷா விளையாடியதைப் பார்த்த ப்ரென்டன் மெக்கல்லம், ஆடினால் ப்ரித்வி ஷாவைப்போல் ஆடுங்கள் என்று கொல்கத்தா அணியின் ஓப்பனிங் பேட்ஸ்மேனான சுப்மன் கில்லுக்கு அறிவுரை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement