நியூசிலாந்து அணியின் முன்னாள் அதிரடி வீரரான பிரண்டன் மெக்கலம் தற்போது ஐபிஎல் போட்டிகளில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளராக பதவியேற்றுள்ளார். மேலும் இதே போன்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டில் நடைபெறும் கரீபியன் லீக் போட்டிகளிலும் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கு பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.
Doesn't matter if you are the Head Coach, no one is spared the Cake Smash ????
???? Here's how we celebrated @Bazmccullum's #birthday ????#LandOfChampions #TKR #CPL19 pic.twitter.com/t9uN3G0J9F— TrinbagoKnightRiders (@TKRiders) September 29, 2019
இந்நிலையில் அவருக்கு சில தினங்களுக்கு முன் 38வது பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. தற்போது வெஸ்ட் இண்டீஸ் கரீபியன் லீக் தொடரில் பணிபுரிந்து வரும் அவருக்கு அங்கேயே பிறந்தநாள் கொண்டாட்டம் அந்த அணி வீரர்களால் கொண்டாடப்பட்டது. இந்த பிறந்தநாள் கொண்டாட்டத்தில் கேக்கை முழுவதுமாக அவர் தலையில் போட்டு அவரை முழுவதுமாக முகத்தை மூடி அவரின் பிறந்த நாள் கொண்டாட்டம் சிறப்பாக கொண்டாடப்பட்டது.
மேலும் ஒரு கட்டத்தில் அது படு மோசமாக அவரது முகத்தை மூடும் அளவிற்கு இருந்தது அந்த கொண்டாட்டம் இருப்பினும் அது மகிழ்ச்சியான தருணம் என்பதால் மெக்கல்லம் அதனை ஏற்றுக் கொண்டார். இதுபோன்று கிரிக்கெட் வீரர்கள் பிறந்தநாள் கொண்டாட்டங்கள் செய்வது புதிது கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.