- Advertisement -
இந்திய கிரிக்கெட்

30லயும் சிராஜ் சிங்க இதயத்துடன் 90 மைல் வேகத்தில் ஓடினாரு.. இந்தியா தில்லா நின்னு அதை சமாளிச்சாங்க.. மெக்கல்லம்

இந்திய கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் நடைபெற்ற 5 போட்டிகள் கொண்ட ஆண்டர்சன் – டெண்டுல்கர் கோப்பையை 2 – 2 என்ற கணக்கில் சமன் செய்தது. அதிலும் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற கடைசிப் போட்டியில் கடைசி நாளில் இங்கிலாந்துக்கு வெற்றி பெற 35 ரன்கள் மட்டுமே தேவைப்பட்டது. அதன் காரணமாக இந்தியா நிச்சயம் தோல்வியைச் சந்திக்கும் என்பதே பலருடைய எதிர்பார்ப்பாக இருந்தது.

ஆனால் கடைசி நாளில் அனல் பறக்க பந்து வீசிய இந்தியா 28 ரன்கள் மட்டும் கொடுத்து எஞ்சிய 4 விக்கெட்டுகளையும் எடுத்து இங்கிலாந்தை 6 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. குறிப்பாக முகமது சிராஜ் மட்டும் 3 விக்கெட்டுகளை எடுத்தார். அதற்கு முந்தைய நாளில் ஹாரி ப்ரூக் கொடுத்த கேட்ச்சை சிராஜ் தவற விட்டார். அதனால் கைமீறிய வெற்றியை கடைசியில் அவரே மொத்தம் 9 விக்கெட்டுகளை எடுத்து பெற்றுக் கொடுத்தார்.

- Advertisement -

சிங்க இதயம் சிராஜ்:

அதனால் ஆட்டநாயகன் விருதை வென்ற அவர் இத்தொடரின் 5 போட்டிகளிலும் முழுமையாக விளையாடிய ஒரே வேகப்பந்து வீச்சாளர் என்ற பெருமையைப் பெற்றார். அத்துடன் இத்தொடரில் அதிக விக்கெட்டுகளை (23) எடுத்த பவுலர் என்ற சாதனையையும் சிராஜ் படைத்துள்ளார். இந்நிலையில் ஓவல் போட்டியில் 30 ஓவர்கள் வீசிய பின்பும் சிராஜ் சிங்கம் போல போராடி 90 மைல் வேகத்தில் பவுலிங் செய்து தங்களை தோற்கடித்ததாக ப்ரெண்டன் மெக்கல்லம் போராடியுள்ளார்.

மேலும் இங்கிலாந்து அணி வீசிய அனைத்து சவால்களையும் பாறையைப் போல் சமாளித்து இந்தியா தொடரை சமன் செய்ததாகவும் அவர் பாராட்டியுள்ளார். இங்கிலாந்து அணியின் பயிற்சியாளரான அவர் இது பற்றி பேசியது பின்வருமாறு. “கடைசிப் போட்டியில் இந்தியா கடைசிக்கட்ட நேரத்தில் விளையாடியது சிறப்பானது”

- Advertisement -

மெக்கல்லம் பாராட்டு:

“கடைசிப் போட்டியில் 30வது ஓவரில் கூட முகமது சிராஜ் சிங்கத்தைப் போன்ற இதயத்துடன் 90 மைல் வேகத்தில் பவுலிங் செய்தார். அது ஒரு அற்புதமான முயற்சி. நாங்கள் அந்தப் போட்டியில் வெற்றி பெறும் சூழ்நிலையில் இருந்தோம். கடைசியில் இந்தியா வென்றார்கள். எங்களை விட அவர்கள் சிறப்பாக விளையாடியதால் வெற்றிக்கு தகுதியானவர்கள்”

இதையும் படிங்க: ரொம்ப ராசியான பையன்.. இந்திய அணியும் துருவ் ஜுரேலும்.. அரங்கேறிய தனித்துவமான சாதனை – விவரம் இதோ

“இந்தியா மீது இத்தொடரில் நாங்கள் அனைத்தையும் எறிந்தோம். ஒரு அணியாக அவர்கள் எவ்வளவு திடமாக நின்றார்கள் என்பதற்கு இது சான்றாக அமைந்தது. இங்கிலாந்துக்கு வந்த போது இந்தியா எவ்வளவு சவாலைக் கொடுப்பார்கள் என்பது எங்களுக்குத் தெரியும். அதனால் நாங்கள் விரும்பிய முடிவை பெறுவதற்கு இன்னும் சிறந்த கிரிக்கெட்டை விளையாடியிருக்க வேண்டும்” என்று கூறினார்.

- Advertisement -