இனிமேலும் ஜோ ரூட் மொக்கையான பஸ்பால் ஆட்டத்தை விளையாடுவாரா? மெக்கல்லம் பதில்

Brendon Mccullum
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணிக்கு எதிராக நடைபெற்று வரும் ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் மூன்றாவது போட்டியில் இங்கிலாந்து 434 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. அதனால் 21ஆம் நூற்றாண்டில் தங்களுடைய மிகப்பெரிய தோல்வியை பதிவு செய்து மோசமான சாதனை படைத்த இங்கிலாந்து 2 – 1* (5) என்ற கணக்கில் தொடரில் பின்னடைவை சந்தித்துள்ளது.

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் டி20 போல அதிரடியாக விளையாடி இந்தியாவை இத்தொடரில் வீழ்த்துவோம் என்று இங்கிலாந்து அணியினர் ஆரம்பத்திலேயே எச்சரித்தனர். அந்த கருத்துடன் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து 2, 3வது போட்டியில் பெரிய இலக்கை சேசிங் செய்யும் போது சூழ்நிலைகளுக்கு தகுந்தார் போல் பேட்டிங் செய்யாமல் அதிரடியாக விளையாட முயற்சித்து அடுத்தடுத்த படுதோல்விகளை சந்தித்தது.

- Advertisement -

பஸ்பால் தொடருமா:
குறிப்பாக டெஸ்ட் கிரிக்கெட்டில் 11000 ரன்கள் குவித்த அனுபவம் கொண்ட ஜோ ரூட் அதிரடியாக விளையாடுகிறேன் என்ற பெயரில் குருட்டுத்தனமாக அடித்து தன்னுடைய விக்கெட்டை பரிசளித்தது அந்த 2 போட்டிகளிலும் இங்கிலாந்தின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தது. குறிப்பாக பும்ராவுக்கு எதிராக ரிவர்ஸ் ஷாட்டை அடித்து அவர் குழந்தைத்தனமாக அவுட்டானது ரசிகர்களை கடுப்பாக வைத்தது.

அதனால் நன்றாக விளையாடிக் கொண்டிருந்த ஜோ ரூட்டை மொக்கையான பஸ்பால் ஆட்டத்தை ஆடுங்கள் என்று உசுப்பேற்றி ப்ரெண்டன் மெக்கல்லம் கெடுத்து விட்டதாக இந்திய ரசிகர்களே கடுமையாக விமர்சித்து வருகின்றனர். இந்நிலையில் ஜோ ரூட் அதிரடியாக விளையாடினால் இன்னும் அபாரமாக செயல்பட்டு பல சாதனைகளை படைப்பார் என்று ப்ரெண்டன் மெக்கல்லம் கூறியுள்ளார்.

- Advertisement -

எனவே அவர் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி தொடர்ந்து அதிரடியாக விளையாடுவார் என்று மறைமுகமாக தெரிவிக்கும் மெக்கல்லம் இது பற்றி பேசியது பின்வருமாறு. “அது போன்ற ஷாட்டை பார்த்த அனைவரும் ஜோ ரூட் எங்களுடைய புதிய அணுகு முறையை சமாளிக்க திணறுவதாக பேசுகின்றனர். இருப்பினும் போட்டியில் அவர் ஏற்படுத்தும் தாக்கம் இன்னும் மிகவும் முக்கியமானதாக இருக்கிறது”

இதையும் படிங்க: அவங்க மட்டும் ஒசத்தியா? தோனியிடம் சீக்கிரம் அந்த கேள்வியை கேட்கப் போறேன்.. மனோஜ் திவாரி பேட்டி

“ஒருவேளை மிகப்பெரிய திறமையையும் வரலாற்றையும் கொண்டிருக்கும் அவர் தொடர்ச்சியாக இப்படி விளையாடுவதை வழக்கமாக வைத்திருப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். பின்னர் வெற்றிக்கான உச்சவரம்பு பெரிதாக இருக்கும். நாம் சாதாரண ஜோ ரூட்டை விரும்புகிறோமா அல்லது இன்னும் முன்னேறிய ஜோ ரூட்டை பார்க்க விரும்புகிறோமா? ஒருவேளை ஜோ ரூட் ஸ்பெஷலாக விளையாடினால் எவ்வளவு போட்டிகளில் நம்மால் வெற்றி பெற முடியும் என்பதை நினைத்துப் பாருங்கள்” என்று கூறினார்.

Advertisement