17 வருட கிரிக்கெட் வாழ்விற்கு குட்பை சொன்ன ஜிம்பாப்வே வீரர் – ஓய்வை வெளியிட்டு அதிர்ச்சி

Brendan-Taylor
- Advertisement -

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும், முன்னணி பேட்ஸ்மேனுமான பிரன்டன் டெய்லர் கடந்த 2004ஆம் ஆண்டு இலங்கை அணிக்கு எதிராக ஒருநாள் கிரிக்கெட்டில் அறிமுகம் ஆனார். அதன்பின்னர் டெஸ்ட் மற்றும் டி20 என அனைத்து வகையான கிரிக்கெட்டிலும் அறிமுகமாகி தற்போது வரை கிட்டத்தட்ட 17 ஆண்டு காலம் ஜிம்பாப்வே அணிக்காக விளையாடியுள்ளார். இதுவரை ஜிம்பாப்வே அணிக்காக 34 டெஸ்ட் போட்டிகள், 205 ஒருநாள் போட்டிகள் மற்றும் 45 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.

Brendan Taylor 3

- Advertisement -

டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 சதங்களுடன் 2320 ரன்களும், ஒருநாள் கிரிக்கெட்டில் 11 சதங்களுடன் 6684 ரன்களையும், 45 டி20 போட்டிகளில் விளையாடி 934 ரன்களை குவித்துள்ளார். கடைக்குட்டி அணியாக சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடி வரும் ஜிம்பாப்வே அணியில் ஒரு சிறப்பான பேட்ஸ்மேனாக பல ஆண்டு காலம் நீடித்த பிரெண்டன் டெய்லர் பல சிறப்பான இன்னிங்ஸ்களை விளையாடியுள்ளார்.

அதுமட்டுமின்றி தற்போது நடைபெற்று வரும் அயர்லாந்து ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடரிலும் விளையாடிய இவர் இந்த தொடரின் மூன்றாவது போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற இருப்பதாக அறிவித்திருந்தார்.

Brendan Taylor 2

அதன்படி இந்த கடைசி போட்டியில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட வேளையில் 7 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டம் இழந்தார். இதன் மூலம் அவரது இந்த 17 வருட கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது. இந்த பயணத்திற்காக எப்போதும் நான் நன்றியுள்ளவனாக இருப்பேன் என தனது ஓய்வு குறித்து பிரண்டன் டெய்லர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement