தோனிக்கு ஓய்வுக்கு ரெடி ஆயிட்டாரு. நானும் அவருக்கு விடைகொடுக்க பாட்டும் ரெடி பண்ணிட்டேன் – சி.எஸ்.கே வீரர் கொடுத்த அதிர்ச்சி

bravo
- Advertisement -

ஐபிஎல் தொடரில் மிகவும் வெற்றிகரமாக அணியாக வலம் வருவது சென்னை சூப்பர் கிங்ஸ் அணி. அந்த அணியில் கடந்த 8 வருடத்திற்கு மேலாக டுவைன் பிராவோ விளையாடி வருகிறார். கிரிக்கெட் விளையாட்டில் மட்டுமன்றி இவர் பாடல்கள் பாடுவதிலும், இசையிலும் வல்லவர். தமிழ் சினிமாவிலும் ஒரு பாடல் பாடி நடனமாடி உள்ளது குறிப்பிடத்தக்கது.

Bravo

- Advertisement -

இவர் கடந்த 2016ஆம் ஆண்டு ‘சாம்பியன்’ என்ற பாடலைப்பாடி வெளியிட்டார். அந்த பாடல் அதே ஆண்டு நடைபெற்ற டி20 உலகக் கோப்பை தொடருக்கு பயன்படுத்தப்படுவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் தனது கேப்டன் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தோனிக்காக தற்போது ஒரு பாடலை பாடியுள்ளார். இந்த பாடலை சமீபத்தில் சமூக வலைத்தளத்தில் பாடி ரசிகர்களையும் கவர்ந்தார்.

அதில் , “எம்.எஸ் தோனி.. எம்.எஸ் தோனி.. எம்.எஸ் தோனி.. நம்பர் -7 ராஞ்சி சவுட்டிங் தோனி. இந்தியா சவுட்டிங் மஹி.. சென்னை சவுட்டிங் தல.. என்று பாடியுள்ளார். இந்நிலையில் இந்த பாடல் ஏன் பாடினார் என பிராவோ காரணம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்…

Bravo

தோனியின் பாடலை நான் இன்னும் முழுமையாக முடிக்கவில்லை. இன்னும் சில வேலைகள் இருக்கிறது. தோனியின் கிரிக்கெட் பயணம் எப்படிப்பட்டது எனவும், இந்திய கிரிக்கெட்டில் அது எப்படியான ஒரு தாக்கத்தை ஏற்படுத்தியது என்றும், ரோகித் சர்மா, விராட் கோலி உள்ளிட்ட வீரர்கள் நட்சத்திரமாக ஜொலிக்க வைத்ததில் தோனியின் பங்கு என்ன என்பதையும் கூறியுள்ளேன்.

BRAVOCAR

டோனி தனது கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டார். அதற்காக அவருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தேன். இதனால் அவருக்கு தனிப்பட்ட முறையில் இந்த பாடலை நான் பாடி உள்ளேன் என்று கூறியுள்ளார் பிராவோ.

Advertisement