சி.எஸ்.கே அணியின் வெற்றிக்கு தோனி மட்டுமே காரணமில்லை. இவரும் ஒரு காரணம் – பிராவோ பேட்டி

Bravo
- Advertisement -

இந்தியாவில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் ஐபிஎல் தொடர் நடைபெற்று வருகிறது. இந்தியாவில் மட்டுமின்றி உலக அளவிலும் ரசிகர்களின் ஆதரவு அதிகரித்ததன் காரணமாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வரும் ஐபிஎல் இந்த ஆண்டு 13 வது சீசனாக துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸால் ஏற்பட்ட பாதிப்பு காரணமாக இந்த ஆண்டு ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

bravo-dhoni

இந்நிலையில் தற்போது ஓய்வில் இருக்கும் அனைத்து முன்னணி வீரர்களும் ஐபிஎல் குறித்தும், தங்களது சக அணி வீரர்கள் குறித்தும் பேட்டி அளித்து வருகின்றனர். அந்த வகையில் தற்போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஆல்ரவுண்டரும், வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வீரருமான பிராவோ சென்னை சிஎஸ்கே அணி குறித்து பேட்டி ஒன்றை அளித்துள்ளார்.

அதில் அவர் கூறியதாவது : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பெரும் அனைத்து பெரிய வெற்றிகளுக்கும் காரணம் கேப்டன் தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங்கையே சேரும். அந்த அணியின் உரிமையாளர்களும் இவர்கள் இருவரையுமே முழுவதுமாக நம்புகிறார்கள். சி.எஸ்.கே அணி வீரர்களும் தோனி மீது அவ்வளவு அன்பு கொண்டிருக்கிறார்கள்.

சிஎஸ்கே அணியின் சூழலே மிக அழகானது. மேலும் தொடர்ந்து பேசிய பிராவோ : கிரிக்கெட்டைப் பொறுத்தவரை தோனி மிகப் பெரிய சூப்பர் ஸ்டார். எங்கள் அணியிலும் அவர் அப்படித்தான் அவருடன் மிக சுலபமாக உங்களால் பேசமுடியும். கிரிக்கெட் களத்திற்கு வெளியே வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருக்கும் மிக இயல்பான வீரராக தோனி இருப்பார்.

Fleming 1

அவரின் அறையின் கதவு எப்போதும் திறந்தே இருக்கும். நீங்கள் மிகப் பெரிய சூப்பர் ஸ்டார்களை பற்றி யோசித்துப் பாருங்கள் ஆனால் தோனி தான் அவர்கள் எல்லோரையும் விட மிக தன்னடக்கம் உடையவர். சிஎஸ்கே ஒரு ஸ்பெஷலான அணி, தோனி மற்றும் பயிற்சியாளர் பிளமிங்கே சி.எஸ்.கே பெரும் பெரிய வெற்றிக்கு காரணம் என்று பிராவோ கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement