வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியை சேர்ந்த முன்னாள் வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டரான டுவைன் பிராவோ ஐபிஎல் போட்டிகளின் போது சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 ஆண்டுகள் நட்சத்திர வீரராக விளையாடி வந்தார். அவர் ஐபிஎல் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறும் வரை சென்னை அணியில் அவரது பங்கு என்பது மிக பெரிய ஒன்றாகவே இருந்தது. அதோடு சென்னை அணி சிலமுறை சாம்பியன் பட்டங்களை வென்ற போது அவர் முக்கிய வீரராகவும் இருந்துள்ளார்.
தோனி எனக்கு கொடுத்த அட்வைஸ் இதுதான் : பிராவோ
சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக 10 சீசனங்களில் விளையாடியுள்ள அவர் 154 விக்கெட்டுகளை வீழ்த்தி சி.எஸ்.கே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய பந்து வீச்சாளராக இன்றளவும் இருந்து வருகிறார். அதோடு இரண்டு முறை ஊதா தொப்பியை பெற்ற பந்துவீச்சாளராகவும் அவர் திகழ்ந்துள்ளார்.
அவருக்கும் சிஎஸ்கே அணிக்கும் இடையேயான பந்தமும், தோனிக்கு இடையேயான பந்தமும் அளப்பரியது என்றால் அது மிகையல்ல. இந்நிலையில் சென்னை அணியில் 2018-ஆம் ஆண்டு விளையாடிய போது நடந்த ஒரு சுவாரசியமான சம்பவம் குறித்து தற்போது டுவைன் பிராவோ நினைவு கூர்ந்துள்ளார். அந்த வகையில் அவர் கூறியதாவது :
ஐபிஎல் போட்டிகளில் சி.எஸ்.கே அணி இரண்டு ஆண்டுகள் தடை விதிக்கப்பட்ட பின்னர் மீண்டும் 2018 ஆம் ஆண்டில் களமிறங்கினோம். அப்போது நான் பவுண்டரி லைனில் பந்தை பிடிப்பதற்காக டைவ் அடித்தேன். அந்த நேரத்தில் என்னை அழைத்த தோனி என்னுடைய உடல் நலத்தை கருத்தில் கொண்டு அந்த ஓவர் முடிந்து சில கருத்துக்களை என்னிடம் கூறியிருந்தார்.
அப்படி அவர் கூறியதாவது : நீ மைதானத்தில் இனிமேல் ஒருபோதும் டைவ் அடிக்கக்கூடாது உன்னுடைய உடற்தகுதி மிகவும் முக்கியம். நீ பவுண்டரியினில் டைவ் அடித்து நான்கு ரன்களை தடுப்பதை விட நீ வீசப்போகும் 4 ஓவர்கள் நமக்கு மிகவும் முக்கியமானது.
இதையும் படிங்க : பாக் பவுலருடன் மோதி சொதப்பிய பொல்லார்ட்.. 16 வருடம் கழித்து தோல்வி.. கரண் அணி சாம்பியன்
எனவே பாதுகாப்பாக பீல்டிங் செய்யும்படி அவர் கூறினார். அதன் பின்னர் நான் உள்வட்டத்திலேயே பீல்டிங் செய்ய ஆரம்பித்தேன். அப்போது எனக்கு ஒரு 34 வயது இருக்கும் என டுவைன் பிராவோ அந்த சம்பவத்தை நினைவு கூறியது குறிப்பிடத்தக்கது.



