சி.எஸ்.கே அணிக்கு இந்த நிலைமை வரும்னு நெனச்சிகூட பாக்கல. மன்னிச்சிடுங்க – ரசிகர்களிடம் சாரி கேட்ட சி.எஸ்.கே நட்சத்திரம்

CSK-1

நடப்பு ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி படு மோசமாக விளையாடி வருகிறது. இதுவரை 10 போட்டிகளில் விளையாடிவுள்ள சி.எஸ்.கே அணி மூன்று போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று வெறும் 6 புள்ளிகளை மட்டுமே எடுத்து புள்ளிபட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது. அதுமட்டுமின்றி பிளே ஆப் சுற்றுக்கு கான போட்டி வாய்ப்பில் இருந்து முற்றிலுமாக வெளியேறியுள்ளது என்றே கூறலாம்.

இந்த தொடர் ஆரம்பித்ததில் இருந்து தற்போது வரை கடைசியில் தான் இருக்கிறது. ஒரு முறை கூட முதல் நான்கு இடத்திற்குள் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னேற கூட இல்லை. இந்த படுதோல்விக்கு பல காரணங்கள் கூறப்படுகிறது. முக்கியமாக அந்த அணியில் கடந்த 10 வருடங்களாக இருந்த சுரேஷ் ரெய்னா இல்லை. அதுமட்டுமின்றி பந்து வீச்சாளர் ஹர்பஜன்சிங் இல்லை என்றும் கூறப்படுகிறது.

மேலும் இவர்களுக்கு மாற்று வீரரையும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தற்போது வரை தேர்வு செய்யவில்லை. அதேபோல் அணியில் இடம் பெற்றுள்ள முரளிவிஜய் போன்ற வீரர்கள் சரியாக செயல்படாமல் இருப்பதே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்னை அணியின் முக்கிய ஆல்ரவுண்டர் டுவைன் பிராவோ காயம் காரணமாக நடப்பு ஐபிஎல் தொடரில் இருந்து முற்றிலுமாக வெளியேறினார்.

bravo

இதனை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் நேற்று அறிவித்தது. மேலும் அணியில் இருந்து வெளியேறும் முன்னர் நெகிழ்ச்சியான வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் டிவைன் பிராவோ. அவர் வெளியிட்டுள்ள வீடியோவில் : இது வருத்தமான செய்தி எனது அணியை விட்டு விலகி நாடு திரும்புவதை எண்ணி மிகவும் வருத்தமாக இருக்கிறது.

- Advertisement -

bravo

நமது அணியை ரசிகர்கள் தொடர்ந்து ஆதரிக்க வேண்டும். இந்த தொடர் இந்த முறை எங்களுக்கு எதிர் பார்த்தது போல அமையவில்லை. ரசிகர்களும் இதனை எதிர்பார்த்திருக்க மாட்டார்கள் நாங்கள் சிறப்பான பங்களிப்பை அளிக்க முயற்சி செய்தோம். ஆனால் அது முடிவில் எங்களுக்கு கிடைக்கவில்லை என்று வருத்தமுடன் தெரிவித்திருக்கிறார் பிராவோ.