தோனி மற்றும் சி.எஸ்.கே நிர்வாகம் என்மீது வைத்துள்ள நம்பிக்கையே இத்தனை வருடம் என்னை சிறப்பாக விளையாட வைக்கிறது – சி.எஸ்.கே வீரர்

BRAVOCAR
- Advertisement -

இந்தியாவில் கடந்த மார்ச் மாதம் 29 ஆம் தேதி பதின்மூன்றாவது ஐபிஎல் சீசன் துவங்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக இந்த ஆண்டு நடைபெற இருந்த இந்த ஐபிஎல் தொடர் காலவரையறையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கம் முடிந்த பின்னரே இயல்பு நிலைமைக்கு வரும் அவ்வாறு இயல்பு நிலைக்கு திரும்பும் வரையில் எந்த ஒரு கிரிக்கெட் தொடரும் அல்லது விளையாட்டுப் போட்டிகளும் நடைபெறாது என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.

csk

- Advertisement -

இந்நிலையில் தற்போது இந்தியாவில் மே 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிரிக்கெட் வீரர்கள் பலரும் தங்களது ஓய்வு நேரத்தை சமூக வலைதளங்களில் தங்களது ரசிகர்கள் உடன் உரையாடுதல் மற்றும் அவர்களது அனுபவங்களை பகிர்தல் போன்றவற்றை செய்து நேரத்தை கழித்து வருகின்றனர்.

அதன்படி சென்னை அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டரான பிராவோ தோனியுடன் நடந்த சுவாரசிய நிகழ்வினை தற்போது பகிர்ந்துள்ளார். அதன்படி 2018 ஆம் ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டிக்குப் பின்னர் தான் ஏன் தோனியுடன் ஓட்டப்பந்தயத்தில் ஈடுபட்டேன் என தற்போது வெளியிட்டுள்ளார் டுவைன் பிராவோ. கடந்த 2018 ஆம் ஆண்டு இரண்டு ஆண்டுகள் கழித்து பின்னர் மீண்டும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் காலத்திற்குள் காலடி எடுத்து வைத்தது.

Bravo

இந்த தொடரின் இறுதிப்போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி மற்றும் ஹைதராபாத் அணிகள் மோதின. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அமோக வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது. இந்த போட்டி முடிந்தவுடன் தோனி மற்றும் பிராவோ ஆகியோர் தங்களது கையில் பேட்டுடன் 3 ரன்கள் ஓடினர். அந்த வருடம் சென்னை அணியில் அனைவரும் 30 வயதினை கடந்தவர்கள் என்பதால் சென்னை அணி டேடி அணி என்றும் விமர்சிக்கப்பட்டது.

- Advertisement -

இவர்கள் இருவருக்கும் நடைபெற்ற இந்த ஓட்டப்பந்தயம் வழக்கம் போல் ஒன்றாகவே தெரிந்தது. ஆனால் தோனி வழக்கம்போல் படுவேகமாக ஓடி மயிரிழையில் வெற்றி பெற்றார். இந்த ஓட்டப் பந்தயம் குறித்து தற்போது இது டுவைன் பிராவோ அப்போது நினைவுகூர்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :

Bravo

அந்த தொடர் முழுவதும் நான் மிகவும் மெதுவாக இருக்கிறேன், எனக்கு வயதாகிவிட்டது, நான் கிழவன் ஆகி விட்டேன் என்று தோனி என்னை கிண்டல் செய்து கொண்டே இருந்தார். அதனால் தோனியிடம் நான் ஒரு சவால் விட்டேன். இந்த தொடர் முடிந்தவுடன் இருவரும் ஓட்டப்பந்தயம் வைத்துக்கொள்ளலாம். அந்த போட்டியில் நான் உங்களை தோற்கடிப்பேன் என்று அவருக்கு சவால் விட்டேன் என இரண்டு வருட ரகசியத்தை தற்போது வெளியிட்டுள்ளார் பிராவோ. ஆனால் அந்த போட்டியில் பிராவோ தோனியிடம் தோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது.

csk fans

மேலும் பேசிய பிராவோ கூறுகையில் : நான் தொடர்ந்து சென்னை அணிக்காக விளையாடுவதற்கும், என்னுடைய சிறப்பான செயல்பாட்டிற்கும் தோனி, பயிற்சியாளர் பிளமிங் மற்றும் சென்னை அணி நிர்வாக பயிற்சியாளர், உதவியாளர்கள் என அனைவரும் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையே தான். அவர்கள் என்மீது வைத்திருக்கும் நம்பிக்கையே என்னை தொடர்ந்து சிறப்பாக செயல்பட வைக்கிறது. சென்னை ரசிகர்கள் எங்களுக்கு கொடுக்கும் ஆதரவு பிரமிக்கவைக்கிறது என்றும் பிராவோ நெகிழ்ச்சியுடன் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement