ஒரு கேப்டன் எவ்வாரெல்லாம் இருக்க வேண்டும் என்பதற்கு சரியான ஆள் உலகிலேயே இவர் மட்டும்தான் – பிராவோ புகழாரம்

Bravo
- Advertisement -

இந்திய அணியில் முன்னாள் கேப்டன் தோனி கடந்த ஆகஸ்ட் 15 ஆம் தேதி சர்வதேச போட்டிகளிலிருந்து தனது ஓய்வை அறிவித்தார். அவர் ஓய்வு அறிவித்து பத்து நாட்கள் ஆகியும் அவர் குறித்த செய்திகள் வெளியாவதில் எந்த ஒரு ஓய்வும் இல்லை. அந்த அளவிற்கு நாள் ஒன்றுக்கு பல செய்திகள் தோனி குறித்து வந்து கொண்டேதான் இருக்கின்றன. தோனியின் ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தும் அவர் ஐ.பி.எல் போட்டிகளில் ஆடுவது ஒரு ஆறுதலான விடயமாக அமைந்துள்ளது.

Dhoni

- Advertisement -

இந்நிலையில் “டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழுக்கு” பேட்டி அளித்துள்ள சிஎஸ்கே அணியின் வீரரும், தோனியின் நெருங்கிய நண்பருமான பிராவோ தோனி குறித்து சில கருத்துகளை பகிர்ந்துள்ளார். அதில் அவர் கூறியதாவது : தோனியை தான் எப்போதும் கிரிக்கெட்டில் சிறந்த பினிஷராக கருதுகிறேன்.

உதாரணத்திற்கு நான் பவுலராக இருக்கும்போது 6 ரன்கள் எடுத்தால் வெற்றி பெறும் என்ற நிலையில் எதிர் முனையில் பேட்ஸ்மேனாக தோனி இருந்தால் எப்படி இருக்கும். அவரை 6 ரன்கள் எடுக்காமல் தடுத்து விட்டால் அது நான் செய்த மிகப்பெரிய சாதனையாக பார்ப்பேன். மேலும் பேசிய அவர் : நான் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அவருக்கு நிறைய முறை பந்து வீசி இருக்கவேண்டும் என்பதே என் விருப்பம்.

Bravo

ஏன் என்றால் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களுக்கு எதிராக பவுலிங் செய்வதென்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஒரு கிரிக்கெட் ரசிகராக எல்லோரையும் போல தோனி எப்போதும் விளையாட வேண்டும் என்று விரும்புகிறேன். ஒரு வீரராக கேப்டனாக தோனி போட்டியின் அனைத்து அழுத்தங்களையும் தாங்கிக் கொள்வார்.

Bravo

போட்டியின் போது எப்போதும் அவர் தடுமாறியது இல்லை. எப்போதும் ஒரு கேப்டன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணம் தோனி என்று பிராவோ தோனிக்கு புகழாரம் சூட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement