இந்த வருட ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் யார் ? – சி.எஸ்.கே வீரர் பிராவோ கணிப்பு

Bravo

டிவைன் பிராவோ ஐபிஎல் தொடரில் கடந்த பல ஆண்டுகளாக விளையாடி வருகிறார். ஐபிஎல் தொடரின் ஆரம்பத்தில் மும்பை இந்தியன்ஸ் அணிக்காகவும் அதன்பின்னர் கடந்த பத்து வருடங்களாக சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் லயன்ஸ் ஆகிய இரண்டு அணிகளுக்கும் விளையாடியிருக்கிறார்.

தற்போது கரீபியன் பிரிமியர் லீக் தொடரில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ளப்போகும் இவர் அந்த தொடருக்கு முன்னதாக எந்த அணி வெற்றி பெறும் என்பது குறித்து தனது அனுமானத்தை வெளிப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில்…

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் தொடரின் வரலாற்றில் மிக பலம் வாய்ந்த அணி. ஆனால் மற்ற அனைத்து அணிகளும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு சம பலம் வாய்ந்த அணிதான். அதேபோல் மும்பை இந்தியன்ஸ் அணியும் சமபலம் வாய்ந்த அணி வரலாற்றை புரட்டிப்பார்த்தால் தெரியும், மும்பை இந்தியன்ஸ் அணி எவ்வளவு கடினமான எதிரணி என்று.

CskvsMi

அதேபோல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் மீதும் மற்ற அணிகளுக்கு மதிப்பும் மரியாதையும் இருக்கும் என்பதை நம்புகிறேன். இந்த வருட ஐபிஎல் தொடரில் யார் வெற்றிபெறுவார்கள் என்பதை என்னால் இப்போது கணிக்க முடியாது. ஏனெனில் இம்முறை இத்தொடர் முழுவதுமாக வெளிநாட்டில் நடக்கிறது.

- Advertisement -

Dubai

எனவே இங்குள்ள சூழ்நிலை அனைத்து அணிகளுக்கும் சாதகமாக அமையவாய்ப்புள்ளது. இதன் காரணமாக இம்முறை அனைத்து அணிகளும் இந்தத்தொடரில் சமபலம் கொண்டவர்களாக இருப்பதால் யார் வேண்டுமானாலும் வெற்றி பெறலாம் என்று தெரிவித்திருக்கிறார் டிவைன் பிராவோ.