வீடியோ : ஒற்றை கையால் சிக்ஸ் அடித்து ஆஸ்திரேலிய பவுலரை மிரளவைத்த பிராவோ – வைரலாகும் வீடியோ

bravo
- Advertisement -

ஆஸ்திரேலிய அணி தற்போது வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் முதல் டி20 போட்டி கடந்த சில தினங்களுக்கு முன்னர் நடைபெற்று முடிந்த நிலையில் நேற்று இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 2வது டி20 போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி ஹெட்மையர் மற்றும் பிராவோ ஆகியோரது அதிரடி ஆட்டம் காரணமாக 20 ஓவர்களின் முடிவில் 4 விக்கெட்டுகளை இழந்து 196 ரன்களை குவித்தது.

hetmyer

- Advertisement -

அதிகபட்சமாக ஹெட்மையர் 51 ரன்களையும், பிராவோ ஆட்டமிழக்காமல் 47 ரன்கள் எடுத்து இருந்தனர். பின்னர் 197 ரன்கள் குவித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய ஆஸ்திரேலிய அணி தொடர்ச்சியாக அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றம் அளித்தது. அந்த அணியின் ஆல்ரவுண்டர் மிட்செல் மார்ஷ் மட்டும் ஓரளவு தாக்குப்பிடித்து 54 ரன்கள் அடித்தாலும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் 140 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து.

இதனால் 56 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணி படுதோல்வியை சந்தித்தது. அதுமட்டுமின்றி தொடர்ச்சியாக இரண்டாவது தோல்வியும் அந்த அணி வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக பெற்றுள்ளது. இந்த ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணி 2 க்கு 0 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது பிராவோ அடித்த ஒரு சிக்ஸர் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அதன்படி ஆஸ்திரேலிய அணியின் சுழற்பந்து வீச்சாளர் ஆஸ்டின் அகர் வீசிய பந்தை லெக் சைடில் தூக்கி அடித்த பொது பேட்டில் இருந்து ஒரு கை விலகியதால் ஒற்றைக் கையால் அந்த சிக்சரை அடித்தார். அந்த பந்து மைதானத்தின் மேற்கூரைக்கு பறந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement