இந்த போட்டியில் நாங்கள் இதனை செய்ய தவறிவிட்டோம். அதனாலே தோல்வி பரிசாக கிடைத்தது – பிராத்வெயிட்

Brathwaite
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பொல்லார்ட் 49 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பாக அறிமுக வீரரான சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பிறகு 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 26 ரன்கள் அடித்தார் ஆட்ட நாயகனாக அறிமுக வீரர் சைனி தேர்வானார்.

போட்டி முடிந்து தோல்வி குறித்து பேசிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிராத்வெயிட் கூறியதாவது : நாங்கள் மைதானத்தின் சூழ்நிலையை கணிக்கத் தவறி விட்டோம். பொல்லார்ட் பேட்டிங்கில் சிறப்பாக விளையாடினார். அவருடைய அனுபவம் இந்த போட்டியில் தென்பட்டது. 130 முதல் 140 ரன்கள் வரை அடித்திருந்தால் வெற்றிக்கு போதுமான இலக்காக அமைந்திருக்கும்.

Saini-1

இந்த போட்டியில் நாங்கள் பேட்டிங்கை சிறப்பாக செய்யத் தவறிவிட்டோம் எங்கள் வீரர்கள் ஆக்ரோஷமாக ஆட்டத்தை வெளிப்படுத்தவில்லை. இந்த போட்டியின் மூலம் அடுத்தடுத்த போட்டிகளில் என்ன மாற்றம் செய்ய வேண்டும் என்று புரிந்து கொண்டோம். நரேன் 4 ஓவர்கள் மிக முக்கியமானது வேகப்பந்து வீச்சாளர்களும் சிறப்பாக செய்ய வேண்டியது அவசியம் என்று பிராத்வெயிட் கூறினார்.

Advertisement