பெங்களூரு அணி இந்த தவறை திருத்தும் வரை ஜெயிக்காது. தோல்விக்கான காரணத்தை சரியாக கூறிய – லாரா

Lara
- Advertisement -

ஐபிஎல் தொடரின் எலிமினேட்டர் போட்டி நேற்று முன்தினம் அபுதாபி மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியும், டேவிட் வார்னர் தலைமையிலான சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் மோதின. இந்த போட்டியில் டாஸ் வென்ற சன் ரைசர்ஸ் அணியின் கேப்டன் வார்னர் முதலில் பந்து வீசுவதாக தீர்மானித்தார்.

SRHvsRCB

அதன்படி முதலில் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 131 ரன்களை மட்டுமே குவித்தது. அதிகபட்சமாக டிவில்லியர்ஸ் 56 ரன்களையும், பின்ச் 32 ரன்களை குவித்தனர். அவர்களைத் தவிர மற்ற யாரும் சிறப்பாக விளையாடவில்லை. சன்ரைசர்ஸ் அணி சார்பாக ஹோல்டர் சிறப்பாக பந்து வீசி 4 ஓவர்களில் 25 ரன்கள் விட்டுக்கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

- Advertisement -

அதன் பின்னர் 132 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய சன்ரைசர்ஸ் அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 132 ரன்கள் அடித்து 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதிகபட்சமாக வில்லியம்சன் ஆட்டமிழக்காமல் 50 ரன்களும், ஜேசன் ஹோல்டர் 24 ரன்களும் குவித்தது குறிப்பிடத்தக்கது. இந்த வெற்றியின் மூலம் சன்ரைசர்ஸ் அணி அடுத்து டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் மோத உள்ளது குறிப்பிடத்தக்கது.

holder

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து பெங்களூரு அணியின் தோல்விக்கு பல்வேறு முன்னாள் வீரர்களும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வர தற்போது வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனனான பிரைன் லாரா பெங்களூர் அணி குறித்த தனது விமர்சனத்தை முன்வைத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : பெங்களூர் அணி சிறப்பான கிரிக்கெட் விளையாட்டை வெளிப்படுத்தி வருகிறது.

- Advertisement -

ஆனாலும் சில நேரங்களில் அவர்கள் தடுமாறி தோல்வியை சந்திக்கின்றனர். அந்த தோல்விக்கு சரியான காரணம் யாதெனில் கோலி மற்றும் டி வில்லியர்ஸ் ஆகிய இருவரை மட்டுமே அந்த அணி பெரும்பாலும் நம்பியிருக்கிறது. அவர்கள் இருவரும் ஒரு போட்டியில் சொதப்பும் பட்சத்தில் அந்த அணி நிறையவே தடுமாறுகிறது.

Kohli-ABD

எனவே அவர்களை மட்டும் நம்பி அந்த அணி களம் இறங்க கூடாது என்றும் மற்றவர்களும் அணியில் தங்களது பங்களிப்பை அளிக்க வேண்டும் என்றும் இதுவே தோல்விக்கு முக்கிய காரணமாக இருக்கிறது என்றும் இதனை அந்த அணி சரி செய்ய வேண்டும் என்றும் லாரா தனது கருத்துக்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement