படிக்கலின் இந்த சிறப்பான ஆட்டத்திற்கு இதுவே காரணம். இதுதான் அவரோட பிளஸ் – பிரைன் லாரா கருத்து

Lara
- Advertisement -

நேற்று ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் சதமடித்து அசத்தியுள்ளார் பெங்களூர் அணியின் இளம் ஆட்டக்காரரான தேவ்தத் படிக்கல். இது ஐபிஎல்லில் அவர் அடிக்கும் முதலாவது சதமாகும். இதனால் அவரை கிரிக்கெட் ரசிகர்களும், முன்னாள் கிரிக்கெட் வீரர்களும் சமூக வலைத்தளங்களில் புகழ்ந்து வருகின்றனர். அதில் குறிப்பாக வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் கேப்டனும், கிரிக்கெட் ஜாம்பவானுமான பிரையன் லாரா தேவ்தத் படிக்கல்லின் அற்புதமான ஆட்டத்தை புகழ்ந்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில் : தேவ்தத் படிக்கல்லின் உயரம், இயற்கையானது அவருக்கு வழங்கிய மிகப்பெரிய பரிசு. அதனால் தான் அவரால் கடினமான பந்துகளைக் கூட எளிதாக ஆட முடிகிறது என்று கூறினார். குறிப்பாக இரண்டாவது இன்னிங்சின் ஐந்தாவது ஓவரில் முஷ்டபிஸுர் ரஹ்மான் வீசிய குட் லென்த் பந்தை தனது உயரத்தை பயன்படுத்தி லாங் ஆன் திசையில் சிக்ஸ் அடித்திருப்பார் தேவ்தத் படிக்கல்.

- Advertisement -

இந்த ஷாட்டைப் பார்த்த பிரையன் லாரா இதுதான் தேவ்தத் படிக்கல்லின் சிறந்த ஷாட் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த மாதிரியான ஷாட்டை மற்ற பேட்ஸ்மேன்கள் ஆடுவதற்கு சிரமப்படுவார்கள் ஆனால் படிக்கல்லின் உயரம்தான் இந்த ஷாட்டை அவர் எளிதாக ஆட உதவி செய்கிறது என்று கூறினார்.

padikkal

ஐபிஎல் தொடரின் ஆரம்பத்திலேயே படிகல்லைப்ப் பற்றி புகழ்ந்து பேசியுள்ளார் பிரையன் லாரா. அப்போது படிக்கல் இந்த ஐபிஎல் தொடரில் சதம் அடிப்பார் என்று தான் நம்புவதாகவும் மேலும் இந்த ஐபிஎல்லில் அதிக ரன்கள் அடிக்கப்போகும் வீரராக இவர்தான் இருப்பார் என்றும் கூறியிருந்தார். அவர் கூறியது போல் நேற்றைய போட்டியில் தேவ்தத் படிக்கல் சதமடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Padikkal 3

கடந்த சீசனில் பெங்களூர் அணிக்காக அறிமுகமான படிக்கல் 15 போட்டிகளில் விளையாடி 473 ரன்கள் குவித்து, அந்த தொடரில் பெங்களூர் அணிக்காக அதிக ரன்கள் அடித்த வீரர் என்ற பெருமையைப் பெற்றார். இந்த தொடரில் லாரா கூறியதுபோல் அதிக ரன்கள் அடித்தவர்கள் பட்டியிலில் முதலிடம் பெறுவாரா தேவ்தத் படிக்கல் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Advertisement