சி.எஸ்.கே அணி இந்த வருஷம் சாதிக்காமல் தலைகீழாக வீழ்ச்சியடைய இதுவே காரணம் – லாரா பேட்டி

Lara
- Advertisement -

ஐபிஎல் தொடரில் மிகவும் சிறப்பு வாய்ந்த ஒரு வெற்றிகரமான அணியாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருக்கிறது. இதுவரை விளையாடிய அனைத்து ஐபிஎல் தொடரிலும் பிளே ஆப் சுற்றுக்கு சென்ற ஒரே அணி இதுதான். மேலும் மூன்று முறை ஐ.பி.எல் தொடரின் சாம்பியன் பட்டத்தை வென்ற சி.எஸ்.கே அணி 6 முறை இரண்டாவது இடதிற்கும் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

CSK-1

எட்டு முறை இறுதிப்போட்டி என பல சாதனைகளை படைத்தது மட்டுமின்றி மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளத்தோடு அசைக்க முடியாத இடத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இருந்தது. ஆனால் இந்த வருடம் 12 போட்டிகளில் விளையாடி வெறும் நான்கு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று பிளே ஆப் சுற்றில் இருந்து வெளியேறியது.

- Advertisement -

இந்த தோல்விகள் பல காரணங்கள் கூறப்படுகிறது தற்போது முன்னால் வெஸ்ட் இண்டீஸ் வீரர் பிரையன் லாரா தனது காரணத்தைக் கூறுகிறார். இது குறித்து அவர் கூறுகையில் : சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் பெரும்பாலும் வயதானவர்கள் தான் இருக்கின்றனர். இந்த வயதான வீரர்களால் தான் அணிக்குள் புதிய இளம் வீரர்கள் இடம் பிடிக்க முடியவில்லை.

அந்த அணியில் உள்ள வீரர்களை பாருங்கள் பல வெளிநாட்டு வீரர்கள் பல வருடங்களாக இடத்தை அடைத்துக் கொண்டிருக்கிறார்கள். சென்னை அணி இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல் அனுபவத்தின் பக்கம் நின்று வயதானவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு கொடுத்து வந்தது. இதுதான் அந்த அணியின் மோசமான தோல்விக்கு காரணம் என்று தெரிவித்திருக்கிறார் பிரையன் லாரா.

csk opener

இனிவரும் போட்டியில் இளம்வீரர்களுக்கு வாய்ப்பளித்தால் மட்டுமே அடுத்த ஆண்டுக்கான தெளிவான அணியை பெறமுடியும். அதுமட்டுமின்றி பெருமளவு இளம் வீரர்களுக்கு வாய்ப்பளித்தால் மட்டுமே இந்த சரிவிலிருந்து சி.எஸ்.கே மீண்டு வரும் என லாரா கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement