என் 400 ரன் ரெக்கார்டை உடைக்க இந்திய அணியின் 19 வயதான வீரரான இவராலே முடியும் – லாரா பேட்டி

Lara

பிரைன் லாராவின் மிகப்பெரியதாக சாதனையாக டெஸ்ட் போட்டியில் தனிநபர் அதிகபட்ச ஸ்கோர் ஆன 400 ரன் என்ற சாதனை கருதப்படுகிறது. அந்த சாதனையை இதுவரை முறியடிக்க முடியவில்லை. ஆனால் சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் இடையேயான போட்டியில் வார்னர் அவரின் சாதனைக்கு கிட்டத்தட்ட அருகில் சென்றார்.

Warner-1

அவர் 400 ரன்களை நெருங்கி கொண்டிருக்கும் போது 335 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆஸ்திரேலிய அணி டிக்ளேர் செய்தது. அதனால் வார்னர் லாராவின் மிகப்பெரிய இமாலய சாதனையை நூலிழையில் தவற விட்டார். இதுகுறித்து ஏற்கனவே பேசிய லாரா அவருக்கு சற்று நேரம் கொடுத்து இருந்தால் அவர் 400 ரன்களை எட்டி இருப்பார். மேலும் அவர் என் சாதனையை முறியடிப்பதற்காக நான் காத்துக்கொண்டிருந்தேன். ஆனால் அது நிறைவேறாமல் போனது என்று பேட்டியளித்திருந்தார்.

இந்நிலையில் தற்போது லாரா சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் நான் அடித்த 400 ரன்களை முறியடிக்கும் வாய்ப்பு உள்ள வீரர்கள் என்றால் இந்திய வீரர்கள் 2 பேரை கூறுவேன். அதில் ஒருவர் ரோகித் சர்மா அவர் என்னுடைய 400 ரன்களை அடிக்க அதிக வாய்ப்பு உள்ளது அதற்கு அடுத்து நான் இந்திய அணியின் இளம் வீரரான பிரித்தி ஷாவை சொல்வேன்.

Shaw

ஏனெனில் ரோகித் மற்றும் பிரித்வி ஷா ஆகியோர் டெஸ்ட் போட்டிகளில் துவக்க வீரராக ஆடுபவர்கள் அதுமட்டுமின்றி அதிரடியாக ஆடும் வீரர்கள் என்பதால் நான் இவர்கள் இருவரின் பெயரையும் சொல்கிறேன். ப்ரித்வி ஷாவிற்கு நல்ல திறமை உள்ளது நிச்சயம் அவர் என்னுடைய சாதனையை முறியடிக்க அதிக வாய்ப்பு உள்ளது என்றே நான் கூறுவேன் என்று லாரா கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -