இந்தியாவால் இதை கூட செய்ய முடியல.. கம்பீர் சொன்னது என்னாச்சு? அகர்கரிடம் ஒரு திட்டமும் இல்ல.. ப்ராட் ஹோக்

Bradd Hogg
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியா மண்ணில் நடைபெற்ற டெஸ்ட் தொடரில் தோல்வியை சந்தித்தது. சமீபத்தில் நியூசிலாந்துக்கு எதிராகவும் சொந்த மண்ணில் ஒயிட் வாஸ் தோல்வியை சந்தித்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறாமல் முதல் முறையாக வெளியேறியது. அத்துடன் 10 வருடங்கள் கழித்து பார்டர் கவாஸ்கர் கோப்பையை வெல்ல முடியாமல் ஆஸ்திரேலிய அணிக்கு இந்தியா பரிசாக கொடுத்தது.

இந்நிலையில் அந்தத் தொடருக்கு முன்பாக கௌதம் கம்பீர் தெரிவித்ததை போல் இந்திய அணி செயல்படவில்லை என முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹோக் விமர்சித்துள்ளார். மேலும் தேர்வுக்குழு தலைவர் அஜித் அகர்கரிடம் இந்திய அணியை நீண்ட காலத்தில் வெற்றிகரமாக செயல்பட வைக்கும் திட்டங்கள் இல்லை என்றும் அவர் விமர்சித்துள்ளார். இது பற்றி ஹோக் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

சுமாரான கம்பீர்:

“கௌதம் கம்பீர் ஆரம்பத்திலேயே தங்களுடைய வீரர்கள் அதிரடியாக விளையாடும் ஸ்டைலை உட்படுத்திக் கொள்ள வேண்டும் என்று சொன்னார். அதே சமயம் டெஸ்ட் போட்டியை டிரா செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் அதற்கு தகுந்த தடுப்பாட்டமும் அவர்களிடம் இருப்பதாக கம்பீர் சொன்னார். ஆனால் அவர் சொன்னது போல் இந்திய அணி இந்த தொடரில் செயல்பட்டதை என்னால் பார்க்க முடியவில்லை”

“அதே போல தேர்வு குழுவையும் நீங்கள் பார்க்க வேண்டும். யார் இந்த இந்திய அணியை தேர்ந்தெடுத்தது? குறிப்பிட்ட சூழ்நிலைகளுக்கு தகுந்தாற்போல் யார் அணியை தேர்ந்தெடுக்கிறார்கள். இந்திய அணியை வெற்றிகரமாக வழி நடத்தக்கூடிய நீண்ட கால திட்டம் என்ன? ஏனெனில் டெஸ்ட் சாம்பியன்ஷிப் பைனலுக்கு தகுதி பெறுவது போல் இந்திய அணி இருந்தது”

- Advertisement -

சுமாரான தேர்வு:

“ஆனால் கடைசியில் அவர்கள் தகுதி பெறவில்லை. அதற்கு காரணம் 2 மாதங்களாக அவர்கள் சுமாராக விளையாடினார்கள். எனவே இந்திய அணியின் பயிற்சியாளர் குழுவும் வீரர்களை போலவே அழுத்தத்தில் இருக்கிறார்கள். இத்தனைக்கும் கௌதம் கம்பீர் தமக்கு தேவையான துணைப் பயிற்சியாளர்களை தேர்ந்தெடுத்தார்”

இதையும் படிங்க: சாம்பியன்ஸ் டிராபி தொடரில் பும்ரா விளையாடுவாரா? மாட்டாரா? – அவரது காயத்தின் நிலை என்ன?

“அதே போல சுமாராக விளையாடிய ரோகித் சர்மா, விராட் கோலியையும் அவர் தேர்ந்தெடுத்தார். ஆனால் அந்த இரு லீடர்களும் தங்களுடைய ஆட்டத்தின் மேலே இல்லை. அந்த வகையில் பல்வேறு காரணிகள் நீண்ட காலமாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை கீழே தள்ளி வருகின்றன” என்று கூறினார். இதை அடுத்து இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணி விளையாட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement