இப்படி பண்ணா இந்தியா சொந்த ஊரில் கூட ஜெய்க்க முடியாது.. கோலி ரூட்டை பாருங்க.. கம்பீருக்கு ஹாடின் அட்வைஸ்

Bradd Haddin
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கொல்கத்தாவில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் தென்னாப்பிரிக்காவிடம் 30 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் தென்னாபிரிக்காவிடம் 15 வருடங்கள் கழித்து இந்தியா தங்களது சொந்த மண்ணில் ஒரு டெஸ்ட் போட்டியில் தோற்றது. அந்தத் தோல்விக்கு சுழலுக்கு சாதகமாக அமைக்கப்பட்டிருந்த பிட்ச் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.

இத்தனைக்கும் 2024 நியூசிலாந்து தொடரில் சொந்த மண்ணில் இந்தியா ஒயிட்வாஸ் தோல்வியைச் சந்திக்க சுழலுக்கு சாதகமான பிட்ச்கள் முக்கிய காரணமாக அமைந்தது. இருப்பினும் அதிலிருந்து பாடத்தைக் கற்காத இந்திய அணி மீண்டும் அதே போன்ற பிட்ச்சை அமைத்து தோல்வியைச் சந்தித்தது. குறிப்பாக கொல்கத்தாவில் அப்படிப்பட்ட பிட்ச் தான் வேண்டுமென்று கேட்டு வாங்கியதாக பயிற்சியாளர் கௌதம் கம்பீர் தெரிவித்தார்.

- Advertisement -

சொந்த மண்ணிலேயே திணறல்:

இந்நிலையில் இப்படிப்பட்ட பிட்ச்சுகளில் விளையாடினால் இந்தியாவால் சொந்த மண்ணில் கூட வெல்ல முடியாது என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாடின் தெரிவித்துள்ளார். மேலும் நீண்ட இன்னிங்ஸ் விளையாடி பெரிய ஸ்கோர் குவித்து எதிரணியை தோற்கடிக்கும் விராட் கோலியின் அணுகுமுறையை கௌதம் கம்பீர் பின்பற்ற வேண்டும் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார். இது பற்றி அவர் பேசியது பின்வருமாறு.

“கௌதம் கம்பீர் தலைமையில் இந்தியா இதை 2வது முறையாக செய்துள்ளார்கள். சுழலுக்கு சாதகமில்லாத பிட்ச்களில் பெரிய ஸ்கோர் அடிக்கும் போது தான் இந்தியா தங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகிறார்கள். ஆனால் இது போன்ற பிட்ச்களில் அவர்களுடைய உலகத்தரமான பேட்ஸ்மேன்கள் ஆட்டத்திலிருந்து வெளியே தள்ளப்படுகிறார்கள். இப்படி செய்வதால் அவர்கள் எதிரணி வெற்றி பெறுவதற்கு அதிக வாய்ப்பைக் கொடுக்கிறார்கள் என்று நான் கருதுகிறேன்”

- Advertisement -

விராட் கோலியின் வழி:

“பெரிய ஸ்கோர் அடிக்கும் போது தான் இந்தியா தங்களுடைய சிறந்த கிரிக்கெட்டை விளையாடுகின்றனர். அவர்களுடைய ஸ்பின்னர்கள் மற்றவர்களைக் காட்டிலும் சிறந்தவர்கள். ஆனால் அவர்களுடைய பேட்ஸ்மேன்கள் இது போன்ற பிட்ச்களில் ஸ்பின்னர்களை எதிர்கொள்வதில் சிறந்தவர்கள் கிடையாது. விராட் கோலி கேப்டனாக பொறுப்பேற்ற போது இந்தியா நீண்ட நேரம் பேட்டிங் செய்து பெரிய ரன்கள் குவித்து எதிரணி மீது அழுத்தத்தைப் போட்டனர்”

இதையும் படிங்க: கம்பீர் சொல்றது சரியே.. பிட்ச் மேல தப்பில்ல.. அவரை பாத்து ஆடிருந்தாலே இந்தியா ஜெய்ச்சுருக்கும்.. கவாஸ்கர்

“ஆனால் இது போன்ற பிட்ச்களில் அவர்கள் எதிரணிக்கு அதிக வெற்றி வாய்ப்பை வழங்குகின்றனர். இது போன்ற பிட்ச்கள் சாதாரண ஸ்பின்னர்களையும் ஆட்டத்திற்குள் கொண்டு வருகிறது. ஏனெனில் சாதாரண வீரரை வைத்து பந்தை போட்டால் போதும். மற்ற வேலையை பிட்ச் பார்த்துக் கொள்ளும். இருப்பினும் இது போன்ற பிட்ச்சில் மகிழ்ச்சி என்று கௌதம் கம்பீர் சொன்னதை நான் கேட்டேன். ஆனால் இது தான் அவர்களுக்கு நியூசிலாந்து தொடரிலும் தோல்வியைக் கொடுத்தது” என்று கூறினார்

Advertisement