ஒருமுறை சச்சின் விக்கெட்டை வீழ்த்திய பின்னர் அவர் எனக்கு கூறியது இதுதான் – பிராட் ஹாக் நெகிழ்ச்சி

Hogg
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் இந்திய அணிக்கு எதிராக 1996ஆம் ஆண்டு அறிமுகமானார். அதன்பிறகு 2008ஆம் ஆண்டு வரை விளையாடிய அவர் 7 டெஸ்ட் போட்டிகளிலும், 123 ஒருநாள் போட்டிகளிலும், 15 டி20 போட்டியிலும் ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி உள்ளார்.

hogg

- Advertisement -

ஆஸ்திரேலிய அணிக்கு கிடைத்த மிகச் சிறந்த இடதுகை சைனா மேன் பவுலராக அவர் பார்க்கப்படுகிறார். சர்வதேச அளவில் பல சாதனைகளை புரிந்த அவர் தற்போது ஒரு முறை இந்திய அணியின் ஜாம்பவான் சச்சின் விக்கெட்டை வீழ்த்தியது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துள்ளார்.

அதன்படி அவர் கூறுகையில் :நான் சச்சினை ஒருமுறை ஒருநாள் போட்டியில் வீழ்த்தினேன். அதன் பிறகு அந்த ஆட்டம் முடிந்து இந்திய அணியின் ஓய்வறைக்கு சென்ற நான் அந்த பந்தை எடுத்துச் சென்று இதில் உங்களது ஆட்டோகிராப் எனக்கு வேண்டும் என்று பந்தை சச்சின் இடம் கொடுத்தேன் அதை அந்தப் அதனைப் பெற்றுக் கொண்ட சச்சின் அதில் எனக்கு ஆட்டோகிராஃப் போட்டு கொடுத்தார்.

hogg 1

அதுமட்டுமின்றி இனி என்னுடைய விக்கெட்டை நீங்கள் வீழ்த்தவே முடியாது. இது போன்ற நிகழ்வு அடுத்த முறை நடைபெறாது என்று எழுதி அதற்கு கீழ் எனக்கு கையெழுத்திட்டு தந்தார். அவர் கூறியதுபோலவே அடுத்து 13 முறை நான் அவருக்கு எதிராக ஒரு நாள் போட்டிகளில் நான் பந்துவீசி இருக்கிறேன்.

- Advertisement -

ஆனால் ஒருமுறை கூட அவரது விக்கெட்டை என்னால் வீழ்த்த முடியவில்லை. அந்த போட்டிக்கு பின்னர் சச்சின் எழுதி கொடுத்த அந்த வாசகத்தை நான் இன்றளவும் யோசித்துப் பார்க்கிறேன். அதன் பிறகு என்னால் என் வாழ்க்கையில் சச்சின் கூறியது போல அவரது விக்கெட்டை வீழ்த்தவே முடியவில்லை என்று நெகிழ்ச்சியுடன் பிராட் ஹாக் இந்த சுவாரசியமான நிகழ்வை பகிர்ந்து கொண்டார்.

Sachin-1

சர்வதேச அளவிலும் இந்திய அளவிலும் ஜாம்பவானான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக ஏகப்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் கிரிக்கெட்டில் அவர் படைக்காத சாதனையை இல்லை என்னும் அளவிற்கு அவ்வளவு சாதனைகளை படைத்து இருக்கும் சச்சின் இன்றளவும் இந்திய கிரிக்கெட்டின் கடவுளாக ரசிகர்களால் போற்றப்பட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.

Advertisement