இந்திய டெஸ்ட் அணியில் இருந்து அவங்க 2 பேரை கழட்டி விட்டது சரியான முடிவு – பிராட் ஹாக் ஓபன்டாக்

Hogg
- Advertisement -

இந்தியாவில் தற்போது ஐபிஎல் தொடர் போட்டிகள் நடைபெற்று முடிந்த வேளையில் அடுத்ததாக இந்திய அணி 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் தென்னாப்பிரிக்க அணியை எதிர்த்து இந்திய மண்ணில் விளையாட இருக்கிறது. இந்த தொடருக்கு பின்னர் கடந்த ஆண்டு இங்கிலாந்து சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது கொரோனா அச்சம் காரணமாக ஒத்திவைக்கப்பட்ட இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5-வது டெஸ்ட் போட்டி ஜூலை 1ஆம் தேதி முதல் 5-ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஒரு போட்டிக்காக இங்கிலாந்து செல்லும் இந்திய அணி அங்கு ஒருநாள் மற்றும் டி20 தொடரிலும் பங்கேற்ற விளையாட இருக்கிறது.

IND

- Advertisement -

இந்த 5-வது டெஸ்ட் போட்டிக்கான இந்திய அணியை ஏற்கனவே பி.சி.சி.ஐ அறிவித்து விட்டது. அதில் பார்ம் அவுட் காரணமாக அண்மையில் அணியில் இருந்து ஒதுக்கப்பட்டிருந்த ரஹானே மற்றும் புஜாரா ஆகிய இருவரில் புஜாராவுக்கு மட்டும் மீண்டும் வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஏனெனில் சமீபத்தில் இங்கிலாந்து சென்ற புஜாரா கவுண்டி கிரிக்கெட்டில் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தி சதங்களை குவித்ததன் காரணமாக அவருக்கு மீண்டும் அணியில் வாய்ப்பு கிடைத்துள்ளது.

அதே வேளையில் ஐபிஎல் தொடரில் விளையாடி மேலும் பேட்டிங்கில் சொதப்பிய ரஹானே மோசமான பார்ம் காரணமாக டெஸ்ட் அணியில் இருந்து ஓரங்கட்டப்பட்டுள்ளார். அதேபோன்று இந்திய அணியின் சீனியர் வேகப்பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மாவுக்கும் இந்த தொடரில் வாய்ப்பு கிடைக்கவில்லை. அவரையும் இந்திய டெஸ்ட் அணியில் இருந்து தேர்வுக்குழு வெளியேற்றி உள்ளது.

ishanth 1

இந்நிலையில் தேர்வுக்குழு ரஹானே மற்றும் இஷாந்த் ஷர்மா ஆகியோரை இந்திய டெஸ்ட் அணியில் இருந்து வெளியேற்றியது மிகச் சரியான முடிவு என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் : இந்திய அணி டெஸ்ட் கிரிக்கெட்டில் தற்போது தேர்வுக்குழு எடுத்துள்ள இந்த முடிவானது மிக சிறப்பான ஒன்று. ஏனெனில் ரஹானே மற்றும் இஷாந்த் சர்மா ஆகியோர் இந்திய அணியில் மிகவும் சுமாரான செயல்பாட்டையே வெளிப்படுத்தி வருகின்றனர்.

- Advertisement -

எனவே தொடர்ந்து சொதப்பி வரும் அவர்களை வெளியேற்றிவிட்டு அவர்களுக்கு பதிலாக இளம் வீரர்களுக்கு வாய்ப்பு அளித்தது நல்ல முடிவு. அந்த வகையில் ரஹானேவிற்கு பதிலாக ஸ்ரேயாஸ் அய்யர் அந்த இடத்தில் விளையாடலாம். ஏனெனில் ஷ்ரேயாஸ் ஐயர் விராட் கோலியுடன் நிறைய போட்டிகளில் விளையாடியுள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டிலும் இவர் சிறப்பாக விளையாடும் அளவிற்கு தன்னை தகவமைத்துக் கொண்டதால் அவருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டது சரியான முடிவு.

இதையும் படிங்க : பாண்டியா இப்போ 4டி ப்ளேயராக உருவாகியுள்ளார் – அவரை வளர்த்த முன்னாள் இந்திய வீரர் பாராட்டு

அதேபோன்று இசாந்த் சர்மாவிற்கு பதிலாக பிரசித் கிருஷ்ணாவிற்கு வாய்ப்பு வழங்கியதும் அருமையான ஒன்று. ஏனெனில் இங்கிலாந்து போன்ற ஆடுகளங்களில் சற்று உயரமாக இருக்கும் வேகப்பந்து வீச்சாளர்கள் நன்றாக பந்துவீசுவார்கள் என்பதுதால் அவரும் சரியான தேர்வாகத்தான் இருக்கிறார் என்று பிராட் ஹாக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement