பெங்களூரு அணியில் இவரும் வந்துட்டா அவங்க அசைக்கவே முடியாது – பிராட் ஹாக் நம்பிக்கை

Hogg
- Advertisement -

ஐபிஎல் 14வது சீசனின் முதல் போட்டியில் விராட் கோலி தலமையிலான பெங்களூர் அணியும் ரோகித் சர்மா தலமையிலான நடப்பு சாம்பியன் மும்பை அணியும் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மோதின. ரோகித் சர்மா, கோலி இருவரில் யார் சிறந்த கேப்டன் என சமூக வலைத்தளத்தில் ரசிகர்கள் வாதம்விவாதம் நடத்திக் கொண்டிருக்க அதற்கேற்றார்போல் ஐபிஎல்லின் தொடக்க ஆட்டமே இருவரின் தலமையிலான அணிகளுக்கு இடையில் தொடங்கியது.

Rcbvsmi

- Advertisement -

டாஸ் வென்ற விராட் கோலி ஐபிஎல்லின் எழுதப்படாத விதியின்படி ஃபீல்டிங்கையே தேர்த்தெடுத்தார். அதற்க்கு ஏற்றார்போல் தனது அணியின் பௌலிங் யூனிட்டை வைத்து மும்பை அணியின் பேட்டிங் ஆர்டரை ஆட்டம் காண வைத்தார். முதல் இன்னிங்சில் மும்பை அணி 9 விக்கெட் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது. பெங்களூர் அணியின் வேகப் பந்து வீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் 5 விக்கெட் எடுத்து அசத்தினார்.

அதுவும் டெத் ஓவரில் அவர் வீசியது எல்லாம் ஆஹா ஓஹோ ரகம். இத்தியாவிற்கு இன்னொரு டெத் ஃபெஷலிஷ்டாக வருங்காலத்தில் இருப்பாரா ஹர்ஷல் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.160 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் ஓபனிங் ஆட வந்தார் வாஷிங்டன் சுந்தர், தேவ்தத் படிக்கல் இல்லாத குறையை இவர் நிவர்த்தி செய்வாரா என்ற பெங்களூரு ரசிகர்களுக்கு ஏமாற்றமே மிஞ்சியது. வாஷிங்டன் சுந்தர்,படிதார் இருவரும் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.

maxwell

அதன்பிறகு நான் அடிக்கிறதா இருந்தா அது ஆஸ்திரேலியாக்காக மட்டுமா தான் இருக்கும் என்ற மனநிலையோடு சில ஆண்டுகளாக ஆடிக்கொண்டிருக்கும் கிளன் மேக்‌ஸ்வெல் உள்ளே வந்தார். ஆனால் அப்பொடியொரு எண்ணத்தை கைவிட்டுவிட்டு பெங்களூரு அணிக்காக சிறப்பாக விளையாடினார். மேக்ஸ்வெல் 39 ரன்களுக்கு அவுட்டாக, எப்போதுமே பெங்களூரு அணியின் ஆபத்பாந்தவனாக விளங்கும் ஏபி டிவில்லியர்ஸ் தனது அதிரடியை வெளிப்படுத்தினார். பரபரப்பாக சென்ற ஆட்டம் கடைசி ஓவர் கடைசி பந்தில் ஒரு ரன் எடுத்ததன் மூலம் பெங்களூரின் வெற்றியோடு முடிந்தது.

padikkal

ஐபிஎல்லின் முதல் போட்டியிலேயே நடப்பு சாம்பியன் மற்றும் மிகவும் பலம் வாய்ந்த மும்பையை வீழ்த்தியதால் பெங்களூர் அணிக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. இதில் குறிப்பாக ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தனது டிவிட்டர் பக்கத்தில் பலமான மும்பை அணியை வீழ்த்திய பெங்களூருக்கு வாழ்த்து சொல்லியிருக்கிறார். மேலும் முந்தைய சீசனில் பெங்களூர் அணிக்காக ஓபனிங்கில் கலக்கிய “தேவ்தத் படிக்கல்” மீண்டும் அணிக்கு திரும்பினால் பெங்களூரு அணியின் பலம் பன்மடங்காக உயரும் என்றும் தெரிவித்துள்ளார்.

Advertisement