மொயின் அலிக்கு அபராதம் விதித்தது தவறு. அவரு செய்ஞ்சது தப்பே இல்ல – பிராட் ஹாக் ஆதரவு

Hogg-and-Moeen
- Advertisement -

இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஐந்து போட்டிகள் கொண்ட ஆசஸ் தொடரின் முதலாவது டெஸ்ட் போட்டியானது பர்மிங்காமில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆஸ்திரேலிய அணி இரண்டு விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வீழ்த்தி இந்த தொடரில் தங்களது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. அதோடு 5 போட்டிகள் கொண்ட இந்த கிரிக்கெட் தொடரில் தற்சமயம் ஒன்றுக்கு பூஜ்யம் (1-0) என்ற கணக்கில் முன்னிலை வகுத்துள்ளது.

இந்நிலையில் இந்த போட்டியின் போது சுவாரஸ்யமான பல்வேறு விடயங்கள் நடைபெற்ற வேளையில் இங்கிலாந்து அணியின் சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலிக்கு அபராதம் விதிக்கப்பட்டது அனைவரது மத்தியிலும் தற்போது பேசப்படும் விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் இங்கிலாந்து சுழற்பந்து வீச்சாளரான மொயின் அலி அம்பயரின் அனுமதி பெறாமல் கையில் திரவம் ஒன்றினை பயன்படுத்தினார் என்று அவர்கள் புகார் கொடுக்கவே ஐசிசி அவருக்கு 25% அபராதம் விதித்தது.

- Advertisement -

ஆனால் அது வெறும் உலர் திரவம் மட்டும்தான். அதையும் நான் என்னுடைய விரல்களில் உள்ள காயத்திற்காக தான் பயன்படுத்தினேன் என்றும் மொயின் அலி தெரிவித்திருந்தார். ஆனாலும் ஐசிசி அந்த புகாரின் படி அவருக்கு போட்டி ஊதியத்திலிருந்து 25% அபராதம் விதித்திருந்து.

இந்நிலையில் அப்படி மொயின் அலி கையில் ஏற்பட்ட காயத்திற்காக மருந்து போன்ற திரவத்தை பயன்படுத்தியது விதிமுறைகளுக்கு புறம்பானது அல்ல. அவர் செய்ததில் எந்த ஒரு தவறும் கிடையாது என மொயின் அலிக்கு ஆதரவாக ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் ஒரு கருத்தினை வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அந்த கருத்தில் : மொயின் அலிக்கு வழங்கப்பட்ட இந்த அபராதம் ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்று. ஐசிசி மற்றும் நடுவர்கள் கூறுவது போன்று நேர்மைக்கு புறம்பாக மொயின் அலி நடந்திருந்தால் மைதானத்திலேயே ஏன் அந்த மருந்தினை பயன்படுத்த வேண்டும். நடுவர் புகார் அளித்ததால் ஐசிசி இப்படி எந்த ஒரு விசாரணையும் இல்லாமல் நடந்து கொண்டது வேதனை அளிக்கிறது என அவர் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

இதையும் படிங்க : வேறென்ன பொறாமை தான் காரணம், ஒழுங்கா அவர்கிட்ட மன்னிப்பு கேளுங்க – கம்பீர், கோலி சண்டை பற்றி சேஷாத் அதிரடி பேட்டி

அவர் கூறியது போலவே மொயின் அலிக்கு ஏற்பட்டுள்ள காயத்திற்கான புகைப்படம் தற்போது வெளியாகி அவர் அந்த மருந்தினை எடுத்துக் கொண்டது தவறில்லை என்று அவருக்கு ஆதரவுகள் குவிந்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement