சச்சினும், லாராவையும் கலந்த கலவையாக இந்த இந்திய வீரர் இருக்கிறார் – பிராட் ஹாக் கணிப்பு

Hogg

இந்தியாவில் நடைபெற இருந்த பதின்மூன்றாவது ஐபிஎல் தொடர் கொரோனா ஏற்படுத்திய பாதிப்பு காரணமாக தற்போது ஐக்கிய அரபு அமீரகத்திற்கு மாற்றப்பட்டுள்ளது. மேலும் துபாய், அபுதாபி, ஷார்ஜா ஆகிய மூன்று இடங்களிலும் 60 போட்டிகள் நடைபெறும் என்று கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தத்தொடர் குறித்த விமர்சனங்களை முன்னாள் வீரர்கள் பலரும் சமூக வலைதளம் மூலம் வழங்கி வருகின்றனர்.

ipl

இந்த ஐபிஎல் தொடரில் முதல்முறையாக கோப்பையை வெல்ல காத்திருக்கும் பஞ்சாப், டெல்லி, பெங்களூரு ஆகிய அணிகள் மும்முரம் காட்டும் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில் கோப்பையை கைப்பற்ற வாய்ப்புள்ள டெல்லி கேப்பிடல்ஸ் அணி குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் தனது கருத்துகளை தெரிவித்துள்ளார். அதன்படி அவர் கூறுகையில் :
dc

துடிப்பான இளம் வீரர்கள் மற்றும் அனுபவம் வாய்ந்த மூத்த வீரர்கள் என கலவையாக டெல்லி அணி தேர்வு நடைபெற்றதால் தான் 2019ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் மூன்றாவது இடம் வரை டெல்லி அணியால் முன்னேற முடிந்தது. இந்த வருடம் அவர்கள் கோப்பையை வெல்லும் வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். மேலும் டெல்லி அணியில் ஆறாவது வரிசை வரை இளம் மற்றும் மூத்த வீரர்கள் கலவையாக இடம்பெற்றுள்ளனர்.

இது டெல்லி அணிக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும். தொடக்க வீரர்களாக தவான் மற்றும் ப்ரித்வி ஷா உள்ளனர். அடுத்தடுத்து நிலைகளில் ரிஷப் பண்ட், ஸ்ரேயாஸ் அய்யர் என இந்திய வீரர்கள் இருப்பதால் அதிரடியாக விளையாடி ரன்களை சேர்க்க முடியும் என்று தெரிவித்துள்ளார். மேலும் 19 வயதுக்கு உட்பட்ட அணியில் விளையாடி இந்திய அணி கோப்பையை பெற்றுத் தந்தவரும், கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் 353 குவித்தவருமான பிரித்வி ஷா குறித்து பேசிய அவர் கூறுகையில் :

Prithvi

- Advertisement -

சச்சின் டெண்டுல்கர் மற்றும் பிரைன் லாரா ஆகியவற்றின் கலவையாக நான் ப்ரித்வி ஷாவை நான் பார்க்கிறேன். எதிர்வரும் ஐபிஎல் தொடர்களில் இவர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி டெல்லி அணிக்காக கோப்பையை வென்று கொடுப்பார் என்றும் எதிர்பார்க்கிறேன். மேலும் அது மட்டுமின்றி ஐபிஎல் மூலம் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தி இந்த உலகிற்கு அவர் யாரென்று நிரூபிப்பார் என்று அவர் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.