இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை கைப்பற்ற இந்த அணியால் மட்டுமே முடியும் – பிராட் ஹாக் கணிப்பு

Hogg
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணி கடந்த பல ஆண்டுகளாகவே டெஸ்ட் அரங்கில் தனது ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக முதலிடத்தில் திகழ்ந்து வந்த இந்திய அணி ஊரடங்கு காலத்தில் தனது முதலிடத்தை இழந்தது. முதல் மற்றும் இரண்டாவது இடத்தில் ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து அணிகள் இருந்தாலும் இந்த அணிகளுக்கு இடையேயான புள்ளிகள் மிகவும் குறைவுதான். எனவே மீண்டும் இந்திய அணி முதலிடத்தை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

indvsaus

- Advertisement -

இந்திய அணி டெஸ்ட் போட்டிகளில் தொடர்ந்து சிறப்பாக விளையாடி வருகிறது அதுவும் குறிப்பாக இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்துவது தற்போது கடினமான ஒரு விடயமாக மாறியுள்ளது. ஏனெனில் இந்தியாவில் கடைசியாக நடைபெற்ற ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, இங்கிலாந்து,தென்னப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் என அத்தனை டெஸ்ட் தொடரில் இந்திய அணி அடுத்தடுத்து கைப்பற்றி அசத்தியது.

மேலும் ஆஸ்திரேலியாவை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி டெஸ்ட் தொடரை கைப்பற்றி இந்திய அணி தனது பலத்தை நிரூபித்தது. கடந்த 2012-13 நடந்த டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணிக்கு எதிராக தோல்வியடைந்தது. அதன் பிறகு இந்திய மண்ணில் டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Ind-lose

மேலும் இந்த காலகட்டத்தில் இந்திய அணி ஒரு டெஸ்ட் போட்டியில் மட்டுமே தோல்வியைத் தழுவியது குறிப்பிடத்தக்கது. அவ்வளவு சிறப்பாக சென்று கொண்டிருக்கும் இந்திய அணியை டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய மண்ணிலேயே வீழ்த்த ஒரு அணியால் மட்டுமே முடியும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்ட கருத்தில் கூறியதாவது :

- Advertisement -

இந்திய அணி தற்போது இந்திய மண்ணில் வீழ்த்த முடியாத அணியாக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளங்கி வருகிறது. ஆனால் டெஸ்ட் தொடரை பொறுத்தவரை இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்தும் அனைத்து திறனும் உள்ள அணியாக நான் பாகிஸ்தான் அணியை பார்க்கிறேன் ஏனெனில் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்து வீச்சு, சுழற்பந்து வீச்சு ஆகியவை இந்திய அணிக்கு சமமான நிலையில் உள்ளதால் நிச்சயம் பாகிஸ்தான் அணியால் இந்திய வீழ்த்த முடியும்.

மேலும் சில அரசு விவகாரங்கள் காரணமாக இரு அணிகளும் தனிப்பட்ட முறையில் டெஸ்ட் தொடரில் பங்கேற்க முடியாமல் இருக்கின்றனர். ஆனால் ஒருவேளை அது நடக்குமாயின் பாகிஸ்தான் அணி இந்திய அணியை வீழ்த்த வாய்ப்பு உள்ளது என்று கூறியுள்ளார். மேலும் அதனை அடுத்து இந்திய மண்ணில் இந்திய அணியை வீழ்த்த வேண்டும் என்றால் அது ஆஸ்திரேலிய அணிதான் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement