டி20 உலககோப்பை தொடரில் இந்த 4 அணிகள் தான் அரையிறுதிக்கு தகுதி பெறும் – பிராட் ஹாக் கணிப்பு

- Advertisement -

இந்தியாவில் நடைபெற இருந்த ஏழாவது டி20 உலகக்கோப்பை தொடரானது இங்கு பரவிவரும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக நடைபெறும் சூழல் அமையாததால் இந்த ஆண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் நாடுகளில் நடைபெறும் என்று ஐசிசி ஏற்கனவே தெரிவித்திருந்தது. மேலும் தகுதி சுற்று போட்டிகள் ஓமன் நாட்டிலும் மற்ற போட்டிகள் அனைத்தும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டது.

cup

- Advertisement -

12 அணிகள் பங்கேற்கும் இந்த தொடரானது மிகப்பெரிய எதிர்பார்ப்பை உண்டாக்கியுள்ளது. மேலும் இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் (குரூப் B) ஒரே குழுவில் மோதுவதால் இந்த தொடரின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்த தொடர் குறித்து தங்களது கருத்துக்களை முன்னாள் வீரர்கள், பிரபலங்கள், நிபுணர்கள் என பலரும் தெரிவித்து வருகின்றனர்.

அந்தவகையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் : இந்த டி20 உலககோப்பை தொடரில் அரையிறுதிப் சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் குறித்து தனது கணிப்பை வெளியிட்டுள்ளார். இது குறித்து அவர் குறிப்பிடுகையில் : என்னை பொருத்தவரை இந்தியா, நியூசிலாந்து, இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் ஆகிய 4 அணிகள் தான் இந்த டி20 உலகக் கோப்பை தொடரின் அரையிறுதி சுற்றுக்கு தகுதி வரும்.

IND-vs-ENG

ஏனெனில் இந்த நான்கு அணிகளிலும் உள்ள பேட்டிங் வரிசை பலமாக இருக்கிறது. அதேபோன்று சமீபகால ஆட்டங்களும் அவர்களுக்கு சிறப்பாக அமைந்திருக்கிறது என்று தனது கணிப்பை வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

ரசிகர்களின் கேள்விகளுக்கு அவ்வப்போது சமூக வலைத்தளத்தில் பதிலளித்து வரும் பிராட் ஹாக்கின் இந்த பதிலும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement