இந்த வருட ஐ.பி.எல் தொடரில் இந்த அணி மோசமாக விளையாடி கடைசி இடத்தை பிடிக்கும் – பிராட் ஹாக் கணிப்பு

Hogg
- Advertisement -

இந்த வருட ஐபிஎல் தொடர் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இதற்காக அனைத்து அணிகளும் தற்போது தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன. இந்த தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப், பெங்களூரு ராயல் சாலஞ்சர்ஸ், டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய மூன்று அணிகளும் முதன் முறையாக கோப்பையை வெல்ல முனைப்பில் தயாராகி வருகின்றனர்.

Kxip

- Advertisement -

இதுவரை ஒருமுறை கூட ஐபிஎல் கோப்பையை கைப்பற்றாத இந்த மூன்று அணிகளில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி தற்போது இந்த ஆண்டு புதிய உத்வேகத்துடன் களமிறங்குகிறது. அதாவது அணியின் புதிய கேப்டனாக இளம் வீரர் ராகுல் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளராக அணில் கும்ப்ளே அது மட்டுமின்றி ஏகப்பட்ட துடிப்பான இளம் வீரர்கள் மற்றும் அதிரடியான வெளிநாட்டு வீரர்கள் என அட்டகாசமான வீரர்கள் தேர்வு அமைந்துள்ளது.

இம்முறை ராகுல் தலைமையிலான பஞ்சாப் அணியில் கெயில், மேக்ஸ்வெல், நிக்கலஸ் பூரன் போன்ற வெளிநாட்டு அதிரடி வீரர்களும் கருண் நாயர், சர்ப்ராஸ் கான், ராகுல், மந்தீப் சிங், மயங்க் அகர்வால் என உள்நாட்டு வீரர்களும் சரியான கலவையில் உள்ளதாலும், பவுலிங்கில் முகமது ஷமி, ஜோர்டான், முஜிபுர் ரகுமான், முருகன் அஸ்வின் என சிறப்பான பந்து வீச்சாளர்களை இருப்பதாலும் இம்முறை ஐபிஎல் தொடரை வெல்லும் முனைப்புடன் கிங்ஸ் லெவன் அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

kxip

இருப்பினும் இம்முறை கிங்ஸ் லெவன் அணி கடைசி இடத்தை தான் பிடிக்கும் என்று ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரர் பிராட் ஹாக் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது : பஞ்சாப் அணியை பொறுத்தவரை வெளிநாட்டு வீரர்களில் உள்ள கலவையில் எல்லோரும் மேட்ச் வின்னர் தான். ஆனால் கெயில், மேக்ஸ்வெல், ஜிம்மி நீஷம் ஆகியோர் தொடர்ந்து சிறப்பாக விளையாட கூடியவர்கள் கிடையாது. ஓரிரு போட்டிகளில் சிறப்பாக விளையாடுவார்கள், பின்னர் படுமோசமாக ஆடுவார்கள்.

Maxwell

எப்போதும் ஐபிஎல் தொடரில் வெளிநாட்டு வீரர்கள் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடினால் மட்டுமே அந்த அணியால் ஆதிக்கம் செலுத்த முடியும். அந்த வகையில் தற்போது பஞ்சாப் அணியில் இடம் பிடித்திருக்கும் வெளிநாட்டு வீரர்கள் தொடர்ச்சியான ஆட்டத்தை வெளிப்படுத்தினால் மட்டுமே அவர்களால் சாதிக்க முடியும் இல்லை என்றால் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இம்முறை ஐபிஎல் தொடரின் கடைசி இடத்தை தான் பிடிக்கும் என்று ஹாக் ஓப்பனாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement