தற்போதைய உலகின் பெஸ்ட் லெவன் ஒருநாள் அணியை வெளியிட்ட ஹாக். தோனிக்கு இடமில்லை – வீரர்கள் பட்டியல் இதோ

Hogg
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளராக இருந்த பிராட் ஹாக் சமகாலத்தின் சிறந்த ஒருநாள் அணியை தேர்வு செய்து வெளியிட்டார். இதில் துவக்க வீரர்களாக ஆஸ்திரேலியா அணியின் டேவிட் வார்னர் மற்றும் இந்திய அணியின் ரோகித் சர்மா ஆகியோர் இருக்கின்றனர். அடுத்ததாக விராட் கோலி கேப்டனாக மூன்றாம் இடத்திலும் ஆடுவதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

- Advertisement -

அதற்கு அடுத்து அவர் கூறுவது போல் கேன் வில்லியம்சன் இடம்பெற்றிருக்க வேண்டும். ஆனால், அவரது ஆட்டம் சரியாக இருந்தாலும். அவரது ஸ்ட்ரைக் ரேட் மிகக் குறைவாக இருக்கிறது அதன் காரணமாகத்தான் இவரை அணியில் எடுக்கவில்லை என்று கூறியுள்ளார். அதனை தாண்டி ஆரோன் பின்ச் இந்த அணியில் இடம் பெற தகுதியானவர் என்று தெரிவித்துள்ளார்.

ஆனால் ரோகித் சர்மா மற்றும் டேவிட் வார்னர் ஆகியோருக்கு இடையில் ஆரோன் பின்ச் இடம் பெறுவது மிகக் கடினம் என்றும் தெரிவித்துள்ளார். இதனால்தான் இந்த இருவரையும் இவரது வரலாற்று சிறப்பு மிக்க சிறந்த அணியில் தேர்வு செய்யவில்லை என்று கூறியுள்ளார். இந்த அணியில் ஆல் ரவுண்டராக பென் ஸ்டோக்ஸ் மற்றும் ரவிந்திர ஜடேஜா ஆகியோர் தேர்வாகி உள்ளனர்.
buttler

மேலும் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேனாக தோனி தேர்வுசெய்யப்படவில்லை அவருக்கு பதிலாக கீப்பராக ஜோஸ் பட்லர் வேகப்பந்து வீச்சாளராக மிட்செல் ஸ்டார்க், லாக்கி பெர்குசன், முகமது சமி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சுழற்பந்து வீச்சாளராக யுஜவேந்திர சாஹல் இருக்கிறார். இந்த அணியில் 5 இந்திய வீரர்கள் இடம் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Kohli-1

பிராட் ஹாக் தேர்வு செய்த சமகால கிரிக்கெட்டின் சிறந்த ஒருநாள் லெவன்:

ரோஹித் சர்மா, டேவிட் வார்னர், விராட் கோலி(கேப்டன்), பாபர் அசாம், பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர்(விக்கெட் கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, மிட்செல் ஸ்டார்க், லாக்கி ஃபெர்குசன், முகமது ஷமி, யுஸ்வேந்திர சாஹல்.

Advertisement