சிறந்த ஐ.பி.எல் பெஸ்ட் லெவனை தேர்வு செய்த முன்னாள் ஆஸி வீரர் – வீரர்களின் விவரம் இதோ

Hogg

ஐபிஎல் தொடர் துவங்க இன்னும் சில நாட்களே இருக்கிறது. இதற்காக அனைத்து அணியின் வீரர்களும் கடுமையாக பயிற்சி செய்து வருகிறார்கள். மேலும் அணியின் பயிற்சியாளர் தங்களது அணியில் திட்டம் என்ன என்பதை கடுமையாக உட்கார்ந்து தங்களது அணிகளுடன் தீட்டி கொண்டிருக்கின்றனர். அதே நேரத்தில் இந்த வருடம் ஐபிஎல் தொடர் துவங்க தாமதமாகி விட்டதால் பல முன்னாள் வீரர்களும், விமர்சகர்களும் தங்களுக்கு பிடித்தவர்களை சேர்ந்த ஐபிஎல் அணியை அறிவித்து வருகிறார்கள்.

IPL

யார் அணியை தேர்வு செய்தாலும் அதில் முக்கியமான மிகச்சிறந்த ஐபிஎல் வீரர்களை தேர்வு செய்து வருகின்றனர் அதில் தவறு ஒன்றும் இல்லை. தோனி, விராட் கோலி, ரோஹித் சர்மா, ஜஸ்பிரித் பும்ரா போன்றவர்கள் அனைவரது அணியிலும் இடம் பெற்றார்கள். ஆனால் முன்னாள் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் முன்னாள் வீரர் மற்றும் ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் பிரெட் ஹாக் தனக்கு பிடித்த ஐ.பி.எல் டி20 அணியை தேர்வு செய்து வெளியிட்டிருக்கிறார்.

அந்த அணியில் இந்தியாவின் முக்கிய வீரர்களுக்கும், ஐபிஎல் தொடரில் மிகச்சிறந்து விளங்கிய வீரர்களுக்கும் இடமில்லை. குறிப்பாக ஐ.பி.எல் வரலாற்றின் வெற்றிகரமான கேப்டனான தோனிக்கே இடமே இல்லை என்று கூறி விட்டார் பிராட் ஹாக். மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் ஹைதரபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் ஆகியோர் தொடக்க வீரர்களாக மூன்றாவது இடத்திற்கு விராட் கோலி, 4-வது இடத்திற்கு கேன் வில்லியம்சன்(கேப்டன்) தேர்வு செய்யப் பட்டிருக்கின்றனர்.

Williamson

ஐந்தாவது இடத்தில் தோனிக்கு பதிலாக ரிஷப் பண்ட் மற்றும் ஆறாவது இடத்தில் ஆன்ட்ரே ரசல் சுழற்பந்து வீச்சாளராக சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ரவீந்திர ஜடேஜா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் சுனில் நரேன் மற்றும் பெங்களூரு அணியின் சார்பில் சாஹல் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டிருக்கின்றனர்.

- Advertisement -

வேகப்பந்து வீச்சாளராக மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர் புவனேஷ்வர் குமார் ஆகியோரை மட்டுமே தேர்வு செய்திருக்கிறார். ஆச்சரியம் என்னவென்றால் தோனிக்கு இந்த அணியில் இடம் இல்லையாம் விக்கெட் கீப்பராக ரிஷப் பண்ட் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.

Pant

பிராட் ஹாக் தேர்வு செய்த பெஸ்ட் ஐ.பி.எல் டி20 அணி இதோ :

1) டேவிட் வார்னர், 2) ரோகித் சர்மா, 3) விராட் கோலி, 4) கேன் வில்லியம்சன், 5) ரிஷப் பண்ட், 6) ஆண்ட்ரே ரசல், 7) ரவீந்திர ஜடேஜா, 8) சுனில் நரேன், 9) சாஹல், 10) ஜஸ்பிரித் பும்ரா, 11) புவனேஸ்வர் குமார்.