தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்களில் இவர்கள் 4 பேர் மிகவும் ஆபத்தானவர்கள் – பிராட் ஹாக் கணிப்பு

Hogg
- Advertisement -

கரோனா பாதிப்பு காரணமாக உலகமே ஊரடங்கு நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் உலகம் முழுவதும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 14 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் வேலையில் ஆஸ்திரேலியாவிலும் சில மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

aus

- Advertisement -

அதே நாட்டில் ஆறு மாத காலம் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். எந்த ஒரு வீரரும் இந்த கட்டுப்பாட்டின் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே நேரத்தை கழித்துவருகின்றனர்.

இந்த ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்விகளுக்கு பல முன்னாள் வீரர்களும் பதிலளித்து வருகின்றனர். அதன்படி தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

hogg

இதில் ரசிகர் ஒருவர் சமகாலத்தில் மிகச்சிறந்த நான்கு வேகப்பந்து வீச்சாளர்கள் யார் யார்? என்று கேள்வி கேட்டிருந்தார். அதற்கு பதிலளித்த அவர் கூறியதாவது : தற்போது இருக்கும் பந்துவீச்சாளர்களில் ஆஸ்திரேலியாவை சேர்ந்த பேட் கம்மின்ஸ், மிட்செல் ஸ்டார்க், இந்தியாவை சேர்ந்த ஜஸ்பிரித் பும்ரா மற்றும் டிரென்ட் போல்ட் ஆகிய நால்வரும் தான் சமகாலத்தில் மிகச் சிறந்த பந்து வீச்சாளர்கள் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

இதில் பும்ராவை எப்போதும் ஹாக் தொடர்ந்து புகழ்ந்து வருவது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய நியூசிலாந்து தொடரில் பும்ரா சொதப்பிய போதும் அவருக்கு பிராட் ஹாக் தொடர்ந்து தனது ஆதரவினை அளித்து வருகிறார்.

bumrah 2

மேலும் தொடர்ந்து ரசிகர்களின் கேள்விக்கு தனது பதிலை அளித்து வருகிறார். இவர் கொடுக்கும் பதில்களுக்கு தொடர்ந்து ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement