பவர்பிளேவில் பந்துவீசுவதில் இந்திய பந்துவீச்சாளர்களான இவர்களே பெஸ்ட் – பிராட் ஹாக் கணிப்பு

Hogg
- Advertisement -

கொரோனா தொற்று காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டும், ரத்து செய்யப்பட்டும் வருகின்றன. அந்த வகையில் இந்தியாவில் தற்போது மார்ச் 29ஆம் தேதி தொடங்க இருந்த ஐபிஎல் தொடர் ஏப்ரல் 15ம் தேதி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மேலும் அதற்கு அடுத்தும் இந்த தொடர் நடை பெறுவது சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்தியாவில் மக்களின் இயல்புவாழ்க்கை திரும்பவே இன்னும் சில மாதங்கள் ஆகும் என்பதால் அடுத்த சில மாதங்களுக்கு கிரிக்கெட் போட்டி என்பது கிடையாது என்றே தோன்றுகிறது.

Ipl cup

இந்நிலையில் தற்போது பவர்ப்லே ஓவர்களில் சிறப்பாக பந்து வீசுவது யார் என்று தெரிவித்துள்ளார் முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக். இந்தியாவில் ஆண்டுதோறும் மார்ச் முதல் மே மாதங்களில் ஐபிஎல் கிரிக்கெட் திருவிழா நடப்பது வழக்கம். கரோனா வைரஸ் தாக்கம் காரணமாக தற்போது இந்த ஐபிஎல் தொடர் தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இது நடக்குமா என்பதே சந்தேகம்தான்.

- Advertisement -

இந்நிலையில் ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய பிராட் ஹாக் ரசிகர்களுடன் ட்விட்டர் மூலம் உரையாடி வருகிறார். அதில் தான் கிரிக்கெட் விளையாடியபோது ஏற்பட்ட அனுபவங்கள், சந்தித்த தருணங்கள் என அனைத்தையும் அவர் தற்போது பகிர்ந்து வருகிறார்.

Zaheer-Khan

அதன்படி ரசிகர்களுடன் நடந்த நேரடி உரையாடலில் மேலும் பவர் பிளே ஓவர்களில் யார் சிறந்த பந்துவீச்சாளர் என்ற கேள்விக்கும் அவர் பதில் அளித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு சின்ன வீடியோவில் : ஜாகிர் கான் மற்றும் முனாஃப் படேல் ஆகியோர் பவர்ப்லே ஓவர்களில் சிறப்பாக பந்துவீசுவார்கள் என்று தெரிவித்துள்ளார்.

- Advertisement -

அதே வேளையில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக ஆடிய மோர்னே மோர்கல், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்காக ஆடிய ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ஹர்பஜன் சிங், ஷேன் வாட்சன் ஆகியோர் பவர்ப்லே ஓவர்களில் சிறப்பாக பந்து வைக்கக்கூடிய வீரர்களாகவும் தேர்வு செய்துள்ளார்.

ashwin

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான இவரின் கருத்துக்களுக்கு இந்திய ரசிகர்களின் மத்தியில் அதிகமான வரவேற்பு இருப்பதால் ரசிகர்கள் அவரிடம் தொடர்ந்து கேள்விகளை முன்வைத்து வருகின்றனர். அவரும் தன்னால் முடிந்த அளவு அனைத்து கேள்விகளுக்கும் பதிலளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement