இப்போதுள்ள வீரர்களில் இவரே சிறந்த கேப்டன். ஆனால் கோலி இல்லயாம் – பிராட் ஹாக் கணிப்பு

Hogg
- Advertisement -

கரோனா பாதிப்பு காரணமாக உலகமே ஊரடங்கு நிலையில் உள்ளது. நாளுக்கு நாள் உலகம் முழுவதும் பாதிப்புகள் அதிகரித்து வருகிறது. தற்போது வரை 30 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 21 நாட்கள் ஊரடங்கு அமலில் இருக்கும் வேலையில் ஆஸ்திரேலியாவிலும் சில மாதங்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.

Hogg

- Advertisement -

அதேபோன்று ஆஸ்திரேலிய நாட்டில் ஆறு மாத காலம் விமானத்தில் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரர்கள் வீட்டுக்குள்ளேயே முடங்கி உள்ளனர். எந்த ஒரு வீரரும் இந்த கட்டுப்பாட்டின் காரணமாக வெளிநாடுகளுக்கு செல்ல முடியாது என்பதால் வீட்டிலேயே நேரத்தை கழித்துவருகின்றனர்.

இந்த ஓய்வு நேரத்தில் கிரிக்கெட் ரசிகர்களின் கேள்விகளுக்கு பல முன்னாள் வீரர்களும் பதிலளித்து வருகின்றனர். அதன்படி தற்போது ஆஸ்திரேலிய முன்னாள் கிரிக்கெட் வீரர் பிராட் ஹாக் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்து வருகிறார்.

Williamson-1

அதன்படி ரசிகர் ஒருவர் அவரிடம் தற்போதுள்ள அணிகளில் சிறந்த கேப்டன் யார் என்ற கேள்வியை முன் வைத்துள்ளார். மேலும் இந்திய அணியின் கேப்டன் கோலி மற்றும் நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ஆகியவற்றுக்கான வித்தியாசம் குறித்தும் அவர் அந்த கேள்வியில் சேர்த்திருந்தார். இதற்கு பதிலளித்த ஹாக் கூறியதாவது :

- Advertisement -

என்னை பொருத்தவரை தற்போது நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் சிறந்த கேப்டன் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் கோலி எப்போதும் ஆக்ரோஷமானவர் அவரது கேப்டன்சி அதிரடி இருக்கும் இருப்பினும் வில்லியம்சன் விட அவரது கேப்டன்சியில் பெரிய மாற்றம் இல்லை என்றாலும் ஒரு அணியாக வில்லியம்சன் சிறப்பாக வழி நடத்துகிறார் என்று நான் கூறுவேன்.

Williamson

அந்த அணியின் பொறுமை நிதானம் அனைத்திற்கும் அவர் முன்னுதாரணமாகத் திகழ்கிறார். இந்திய அணியை பொறுத்தமட்டில் சிறப்பாக செயல்பட்டாலும் இந்திய அணியில் ஒரு அதிரடி இருக்கிறது. சமகால கிரிக்கெட்டில் இரண்டு சிறந்த வீரர்களாக கருதப்படும் இவர்கள் இருவருக்கும் மிகப் பெரிய வித்தியாசம் இல்லை என்றாலும் சிறிய அளவில் கேப்டன் வில்லியம்சன் முன்னிலையில் இருக்கிறார் என்று அவர் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement