ஃபிட்னெஸ் இல்ல, சர்பராஸ் கான் புறக்கணிக்கப்பட காரணம் அது தான் – அதை செஞ்சா செலெக்ட் பண்ணிடுவாங்க – ப்ராட் ஹாக் பேட்டி

Bradd Hogg
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக ஜூலை மாதம் நடைபெறும் 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் கிரிக்கெட் தொடருக்காக அறிவிக்கப்பட்ட ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி நிறைய சர்ச்சைகளை உண்டாக்கியது. குறிப்பாக கழற்றி விடப்பட்ட புஜாராவுக்கு பதில் ரஞ்சி கோப்பையில் சிறப்பாக செயல்பட்டு வரும் சர்பராஸ் கான் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஐபிஎல் தொடரில் சிறப்பாக செயல்பட்ட ஐபிஎல் தொடரில் அசத்திய ஜெய்ஸ்வால் மற்றும் ருதுராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டது உச்சகட்ட விமர்சனங்களை எழுப்பியுள்ளது. ஏனெனில் அவர்களை விட சர்பராஸ் கான் ரஞ்சி கோப்பையில் அதிக சராசரியில் ரன்கள் எடுத்தும் ஐபிஎல் தொடரில் அசத்தாத காரணத்தால் தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று விமர்சனங்கள் காணப்படுகின்றன.

Sarfaraz Khan Milind Rege

- Advertisement -

அதனால் ரஞ்சி கோப்பையை நிறுத்தி விடுங்கள் என்று சுனில் கவாஸ்கர் அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில் அரசியல் காரணங்களுக்காக தேர்வு குழுவினர் வேண்டுமென்றே அவரை புறக்கணித்து வருவதாக ரசிகர்கள் விமர்சிக்கின்றனர். அந்த நிலையில் கடந்த வருடம் நடைபெற்ற ரஞ்சிக் கோப்பை போட்டியில் சதமடித்து மைதானத்தில் இருந்த முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சேட்டன் சர்மாவை முறைக்கும் வகையில் கொண்டாடிய சர்ஃபராஸ் கான் நன்னடத்தையை பின்பற்றாததுடன் சர்வதேச கிரிக்கெட்டுக்கு நிகரான ஃபிட்னஸ் கடைபிடிக்காததாலேயே இந்திய அணியில் புறக்கணிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வெளியாகின.

சிம்பிள் காரணம்:
ஆனால் உண்மையில் அந்தப் போட்டியில் சேட்டன் சர்மா இல்லை சலில் அன்கோலா தான் இருந்தார் என்று புதிய செய்திகள் வெளியாகியுள்ளது. அத்துடன் அப்போட்டியில் பயிற்சியாளர் மற்றும் மும்பை அணியினருக்கு தம்முடைய தரத்தை காட்டும் வகையிலேயே சர்பராஸ் கான் அப்படி கொண்டாடினாரே தவிர தேர்வுக்குழுவுக்கு பதிலடி கொடுக்கும் நோக்கத்தில் செயல்படவில்லை என்றும் தெரிய வந்துள்ளது. இந்நிலையில் இந்திய அணியில் 3வது இடத்தில் விளையாடும் புஜாராவுக்கு பதில் 5, 6 ஆகிய மிடில் ஆர்டரில் விளையாடும் சர்பராஸ் கான் எப்படி தேர்வாக முடியும் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாக் தெரிவித்துள்ளார்.

Sarfaraz Khan Coach

அதாவது அவர் விளையாடும் இடம் இன்னும் இந்திய அணியில் காலியாகாத காரணத்தாலேயே இதுவரை தேர்வு செய்யப்படவில்லை என்று ப்ராட் ஹாக் கூறியுள்ளார். மேலும் சுமாரான பவுலிங்கை கொண்ட ரஞ்சிக் கோப்பையை விட தரமான பவுலிங்கை கொண்ட ஐபிஎல் தொடரில் அசத்திய காரணத்தால் ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகின. அதன் காரணமாக தற்போதைய ரஞ்சிக் கோப்பை செயல்பாடுகளுடன் அடுத்த ஐபிஎல் தொடரில் அசத்தும் பட்சத்தில் சர்பராஸ் நிச்சயம் இந்திய அணிக்கு தேர்வாக வாய்ப்புள்ளதாக தெரிவிக்கும் அவர் இது பற்றி யூடியூப் பக்கத்தில் பேசியது பின்வருமாறு.

- Advertisement -

“ரஞ்சி கோப்பையில் சர்ஃபராஸ் கான் மிகவும் அபாரமாக செயல்பட்டு வருகிறார். இருப்பினும் அவருக்கு அணியில் ஏன் வாய்ப்பு கிடைக்கவில்லை? இந்த நிலைமையில் அவர் ஏன் இந்திய அணியில் தேர்வு செய்யப்படவில்லை என்பதற்கான காரணம் எனக்கு தெரியும். அதாவது அவர் தன்னுடைய மாநில அணிக்காக 5 அல்லது 6வது இடத்தில் தான் விளையாடுகிறார். அது போக தரமான பவுலிங்கை கொண்ட ஐபிஎல் தொடரில் அவருடைய புள்ளிவிவரங்கள் அந்தளவுக்கு சிறப்பாக இல்லை”

hogg

“எனவே அதன் காரணமாகவே சர்பராஸ் கானை இந்திய அணியில் தேர்வு செய்வதற்கு தேர்வு குழுவினர் சற்று யோசிக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன். ஒருவேளை அடுத்த ஐபிஎல் தொடரில் அவர் தன்னுடைய செயல்பாடுகளில் சற்று முன்னேற்றத்தை ஏற்படுத்தினால் இந்திய டெஸ்ட் அணியில் விளையாடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்” எனக்கு கூறினார். அவர் கூறுவது போல இங்கிலாந்தின் கவுண்டி உள்ளூர் தொடரில் அபாரமாக செயல்பட்ட அனுபவமிக்க புஜாராவே ஃபைனலில் சொதப்பினார்.

இதையும் படிங்க:2011 போல 2023 உ.கோ வெல்ல பேட்டிங்கில் உள்ள அந்த பெரிய ஓட்டையை இளம் வீரர்களால் சரி பண்ணுங்க – சாஸ்திரி கோரிக்கை

அப்படிப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட அதே போன்ற சுமாரான பவுலிங்கை தரத்தை கொண்ட ரஞ்சிக் கோப்பையில் அசத்தும் சர்பராஸ் இந்திய அணிக்கு விளையாட இன்னும் தயாராகவில்லை என்று தேர்வு குழுவினர் கருதுகின்றனர். எனவே ருதுராஜ், ஜெய்ஸ்வால் போல ரஞ்சி கோப்பை மட்டுமின்றி ஐபிஎல் தொடரிலும் அசத்தினால் அவருக்கு வாய்ப்பு கிடைக்க அதிகமான வாய்ப்புகள் ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement