நியூசிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய கிரிக்கெட் அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது. அதனால் 36 வருடங்கள் கழித்து நியூசிலாந்திடம் தோல்வியை சந்தித்த இந்தியா வெற்றி பாதைக்கு திரும்ப வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளது. முன்னதாக பெங்களூருவில் நடைபெற்ற முதல் போட்டியில் 46க்கு ஆல் அவுட்டான இந்தியா போராடியும் வெற்றி பெற முடியவில்லை.
இருப்பினும் அந்தப் போட்டியில் சர்பராஸ் கான் சிறப்பாக பேட்டிங் செய்து தனது முதல் சதத்தை அடித்து 150 ரன்கள் குவித்து அசத்தினர். அதனால் குறைந்தபட்சம் இன்னிங்ஸ் தோல்வியை சந்திப்பதில் இருந்து அவர் இந்தியாவை காப்பாற்றினார் என்று சொல்லலாம். மறுபுறம் கேஎல் ராகுல் 0, 12 ரன்களில் அவுட்டாகி இந்தியாவின் தோல்விக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
சர்பராஸ் கான் வீக்னெஸ்:
அதனால் அவருக்கு பதிலாக சர்பராஸ் கான் தொடர்ந்து வாய்ப்பு பெற வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாக இருக்கிறது. இந்நிலையில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து தென் ஆப்பிரிக்கா போன்ற வேகத்துக்கு சாதகமான நாடுகளில் சர்பராஸ் கான் கண்டிப்பாக தடுமாறுவார் என்று முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாக் கவலை தெரிவித்துள்ளார். மேலும் ராகுலுக்கு பதில் சர்பராஸ் கான் வாய்ப்பு பெற வேண்டும் என்றும் அவர் ஆதரவு தெரிவித்துள்ளார்.
அத்துடன் ரிஷப் பண்ட் காயத்திலிருந்து குணமடையவில்லையெனில் ராகுலுக்கு பதில் வருங்காலத்தை கருத்தில் கொண்டு துருவ் ஜுரேல் வாய்ப்பு பெற வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். இது பற்றி ப்ராட் ஹாக் பேசியது பின்வருமாறு. “சர்பராஸ் கான் பேட்டிங்கில் முன்னோக்கி நகர்வதில் (மூவிங் ஃபார்வார்ட்) எனக்கு ஒரு கவலை இருக்கிறது. ஒருவேளை இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா அல்லது ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டால் பவுலர் பந்து விடுவதற்கு முன்பே செட்டாகும் விதத்தால் அவர் தடுமாறலாம்”
ராகுல் வேண்டாம்:
“ஏனெனில் அவருடைய கைகள் பந்தை எதிர்கொள்ள மிகவும் கீழிருந்து வருகிறது. அடுத்த போட்டியில் ராகுலுக்கு பதிலாக நான் சுப்மன் கில்லை கொண்டு வருவேன். ஏனெனில் அழுத்தத்தின் கீழ் 150 ரன்கள் அடித்த சர்பராஸ் கான் கிட்டத்தட்ட உங்களை தோல்வியில் இருந்து காப்பாற்றினார். எனவே அந்த வேகத்தை நீங்கள் அவருக்கு தொடர்ந்து கொடுக்க வேண்டும்”
இதையும் படிங்க: நானே இதுக்காகத்தான் வெயிட் பண்ணிட்டு இருந்தேன்.. திமிர் காட்டிய ப்ரித்வி ப்ரித்வி ஷா – என்ன நடந்தது?
“ராகுல் தனக்கான வாய்ப்புகளைப் பெற்றிருந்தார். ஆனால் அவர் அதை சில போட்டிகளாக எடுத்துக் கொள்ளவில்லை. ரிஷப் பண்ட் ஃபிட்டாக இல்லையெனில் அவர்கள் ஜுரேலை தேர்ந்தெடுப்பார்களா? அல்லது ராகுலை விளையாட வைப்பார்களா? நானாக இருந்தால் வருங்காலத்தை கருத்தில் கொண்டு ஒரு பேக்-அப் விக்கெட் கீப்பரை நீண்ட கால திட்டத்திற்காக வளர்ப்பேன்” என்று கூறினார்.



