இந்த ஐபிஎல் தொடர் துவங்கியதிலிருந்து சென்னை அணிக்கு ஒரு மோசமான ஆண்டாக அமைந்தது வருகிறது. ஏனெனில் முதல் போட்டியில் மும்பை அணியை வீழ்த்திய சென்னை அணி அடுத்து வரிசையாக மூன்று தோல்விகளை அடைந்தது. அதன்பிறகு ஒரு வெற்றி பெற்றாலும் மீண்டும் 2 தோல்வி அடைந்தது. இதனால் 7 போட்டிகளில் இரண்டு போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிப் பட்டியலில் ஏழாம் இடத்தை பிடித்திருந்தது.
இந்நிலையில் நேற்று நடைபெற்ற சன்ரைசர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றால் மட்டுமே விளையாட்டிற்கு ப்ளே ஆப் சுற்றுக்கு செல்வதற்கான வாய்ப்பு உயிர்ப்புடன் இருக்கும் என்று களமிறங்கிய சென்னை அணி சிறப்பாக விளையாடி 20 ரன்கள் வித்தியாசத்தில் சன் ரைசர்ஸ் அணியை வீழ்த்தியது.
இந்நிலையில் இந்த சூழலில் சென்னை அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமாயின் இனிவரும் போட்டிகளில் ஆடும் லெவனில் சில மாற்றங்களை செய்தால் மட்டுமே மீண்டும் வெற்றிப் பாதையில் பயணிக்க முடியும் என ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் வீரரான பிராட் ஹாக் சில கருத்துக்களை வழங்கி உள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில் :
பின்வரிசையில் இறங்கி விளையாடும் இடது கை ஆட்டக்காரரான சாம் கரனை மூன்றாவது வீரராக நம்பர் 3 பொசிஷனில் சிஎஸ்கே அணியில் களமிறங்க வேண்டும். ஏற்கனவே அவர் பல t20 தொடர்களில் அவர் மூன்றாம் இடத்தில் இறங்கி சிறப்பாக விளையாடி உள்ளார். மேலும் பிராவோவுக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் இம்ரான் தாகிர் ஆடும் லெவனில் விளையாட வைக்க வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.
அதேபோல தமிழக வீரரான ஜெகதீசனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். சென்னை அணி இதுவரை 8 போட்டிகளில் விளையாடி 3 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. இனி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற வேண்டுமாயின் வரும் அனைத்து போட்டிகளிலும் சிறப்பாக விளையாடி வெற்றி பெற வேண்டும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நேற்றைய போட்டியில் சென்னை அணியின் தொடக்க வீரராக சாம் கரன் களம் இறங்கி விளையாடியது சி.எஸ்.கே அணிக்கு ஒரு சாதகமான விடயமாக பார்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.