பாபர் அசாம் மற்றும் கே.எல்.ராகுல் இருவரில் யார் சிறந்தவர் ? – பிராட் ஹாக்கின் ஆச்சரியமான பதில்

Hogg-1
- Advertisement -

ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளரான பிராட் ஹாக் ஆஸ்திரேலிய அணிக்காக இதுவரை 7 டெஸ்ட் போட்டிகள், 123 ஒருநாள் போட்டிகள் மற்றும் 15 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். மேலும் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றவர் தற்போது சுழற்பந்து வீச்சு பயிற்சியாளராகவும் பல்வேறு அணிகளுக்கு செயல்பட்டு வருகிறார்.

hogg

- Advertisement -

இந்நிலையில் தற்போது நடைபெற்று முடிந்த பாகிஸ்தான் கிரிக்கெட் லீக்கிலும் பணியாற்றிய அவர் தற்போது பாகிஸ்தான் வீரரான பாபர் அசாம் மற்றும் இந்திய அணியின் இளம் வீரரான ராகுல் ஆகியோர் குறித்து தனது கருத்தினை வெளியிட்டார். அதன்படி பாபர் அஸம் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த இளம் வீரர் ஆவார். அவர் தற்போதைய நவீன கால கட்ட பேட்ஸ்மேன்களின் சிறப்பான ஒரு பேட்ஸ்மென் என்பதில் சந்தேகமில்லை.

தற்போது விராத் கோலியின் அளவிற்கு பேசப்படும் அவர் சில ரெக்கார்டுகளை சர்வதேச போட்டிகளில் படைத்து வருவது குறிப்பிடத்தக்கது. ஒருநாள் போட்டிகளில் 54 மற்றும் டி20 களில் 50க்கும் மேல் சராசரி வைத்துள்ளார். அதுமட்டுமின்றி டெஸ்ட் கிரிக்கெட்டில் 45 ரன்கள் மேல் சராசரி வைத்திருக்கும் இவர் மூன்று வகையான போட்டிகளிலும் டாப் 5 வீரர்களில் ஒருவராக திகழ்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

azam

மேலும் ராகுல் இந்திய அணியின் இளம் வீரர் தற்போது இந்திய அணியில் ஒரு முக்கிய வீரராக ஒருநாள், டி20 என அசத்தி வரும் ராகுல் டெஸ்ட் கிரிக்கெட்டில் தான் விட்ட இடத்தை பிடிப்பதற்கு ஆயத்தமாகி வருகிறார். தற்போது உள்ள சூழ்நிலையில் மிகச் சிறந்த பேட்ஸ்மேனாக அபாயகரமானவராக விளங்கி வரும் ராகுல் டி20 போட்டியில் அதிரடியாகவும், ஒருநாள் போட்டிகளில் சூழ்நிலைக்கு ஏற்றவாறு விளையாடி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

- Advertisement -

இந்நிலையில் பிராட் ஹாக் ரசிகர்களின் கேள்விக்கு பதிலளித்த போது உங்களுக்கு வளர்ந்துவரும் வீரர்களான பாபர் அசாம் மற்றும் ராகுல் ஆகியோரில் யாரை பிடிக்கும் என்று கேள்விக்கு பதில் அளித்த பிராட் ஹாக் : பாபர் அசாம் என்று தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிலை யாரும் எதிர்பார்க்கவில்லை. மேலும் ரசிகர்கள் இதனால் ஆச்சரியமடைந்தனர்.

ஏனெனில் தொடர்ச்சியாக சிறப்பாக விளையாடி வரும் ராகுல் விராத் கோலிக்கு அடுத்த இடத்தில் அவரே இன்னும் பல ஆண்டுகள் இருப்பார் என்று நம்பப்பட்டு வரும் வேளையில் பாபர் அசாமை சிறந்த வீரர் என்று குறிப்பிடுவதற்கு ரசிகர்கள் அவர்களது பதிலை அளித்து வருகின்றனர். மேலும் உலக அளவில் ராகுல் சிறப்பாக விளையாடும் பட்சத்தில் அவரை ஏன் தேர்வு செய்யவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

Advertisement