வங்கதேச கிரிக்கெட் அணிக்கு எதிராக கான்பூரில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியா 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சொல்லப்போனால் மழையால் தாமதமான துவங்கிய அந்தப் போட்டியின் 2, 3வது நாட்கள் மொத்தமாக ரத்து செய்யப்பட்டன. அதன் காரணமாக அப்போட்டி டிராவில் முடிவடையும் என்று பலரும் எதிர்பார்த்தனர்.
ஆனால் 4வது நாளில் வங்கதேசத்தை 233 ரன்களுக்கு விரைவாக ஆல் அவுட் செய்த இந்தியா எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தது. அதற்காக வங்கதேசத்தை சரமாரியாக அடித்து நொறுக்கிய இந்தியா 34.4 ஓவரில் 285-9 ரன்களை 8.22 ரன்ரேட்டில் குவித்தது. அந்த ஆட்டத்தில் அதிவேகமாக 50, 100, 150, 200, 250 ரன்களை குவித்த அணியாக இந்தியா 5 உலக சாதனைகளை படைத்தது.
இந்தியாவின் மிரட்டல் வெற்றி:
இறுதியில் வங்கதேசத்தை 2வது இன்னிங்ஸில் 146 ரன்களுக்கு சுருட்டிய இந்தியா 98-3 ரன்கள் குவித்து வெற்றி பெற்றது. அதனால் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஒரு இன்னிங்ஸில் 8 மற்றும் ஒரு போட்டியில் 7க்கும் மேற்பட்ட ரன்ரேட்டில் விளையாடிய முதல் அணியாக இந்தியா 2 புதிய உலக சாதனைகளை படைத்தது. அந்த வெற்றியால் பாகிஸ்தானை போல வீழ்த்துவோம் என்று சவால் விடுத்த வங்கதேசத்தை தோற்கடித்த இந்தியா 2025 டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளிப்பட்டியலில் முதலிடத்தை தக்க வைத்துக் கொண்டது.
இந்நிலையில் கான்பூரில் அற்புதமான வெற்றி பெற்ற இந்திய அணிக்கும் அதை வழி நடத்திய ரோஹித் சர்மாவுக்கும் தலை வணங்குவதாக முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் ப்ராட் ஹாடின் பாராட்டியுள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “அப்போட்டியை வெல்வதற்கான இந்தியா தங்களுக்குத் தாங்களே ஏற்படுத்திக் கொண்டனர். அது நம்மால் எவ்வளவு ரன்கள் முடியும் என்பது பற்றியதல்ல”
ப்ராட் ஹாடின் பாராட்டு:
“வங்கதேசத்தை அவுட்டாக்க போதுமான நேரத்தை கண்டுபிடிப்பதை பற்றியதாகும். இந்தியா கிரிக்கெட்டின் சிறந்த பிராண்டை விளையாடினார்கள். ஆனால் அவை அனைத்தும் போதுமான நேரத்தை கொடுத்துக் கொள்வது பற்றியதாகும். ரோஹித் சர்மா மற்றும் பயிற்சியாளர் குழுவுக்கு தலை வணங்குகிறேன். ரோஹித் சர்மா வெற்றி தான் முக்கியம் என்று எப்போதும் நினைக்கக்கூடிய கேப்டன்”
இதையும் படிங்க: ஏணி வெச்சாலும் எட்டாத கோலியுடன் பாபரை ஒப்பிடாதீங்க.. அந்த 2 இந்தியர்களை உட்காந்து பாக்கலாம்.. முடாசர் நாசர்
“நானும் அப்படியே நினைப்பேன். உண்மையில் அந்தப் போட்டியில் இந்தியா தோற்பதற்கு எதுவுமில்லை. அப்போட்டியில் டிராவை சந்திப்பது மட்டுமே இந்தியாவுக்கு மோசமான முடிவாக இருந்திருக்கும். ஏனெனில் இந்தியா தோற்க வாய்ப்பில்லை. அதனால் ரோஹித் சர்மா இழக்க ஒன்றுமில்லை. அது பார்க்க என்ன ஒரு நல்ல போட்டியாக இருந்தது. அது டெஸ்ட் போட்டியை வெல்வதற்கான அற்புதமான வழி” என்று கூறினார்.



