அதை பாக்குறதுக்கு சந்தோஷமா இருக்கு.. இந்தியா பி டீம்கிட்ட இப்படியா பண்ணுவீங்க.. இங்கிலாந்தை கலாய்த்த ஃபைன்

Brad Haddin
- Advertisement -

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் கிரிக்கெட் தொடரில் டி20 போல அதிரடியாக விளையாடி வெல்வோம் என்று ஆரம்பத்திலேயே எச்சரித்த இங்கிலாந்து முதல் போட்டியில் வென்று முன்னிலையும் பெற்றது. ஆனால் அதற்கடுத்த 3 போட்டிகளில் சுதாரித்து விளையாடி வெற்றி கண்ட இந்தியா 4 போட்டிகளின் முடிவுலேயே 3 – 1* என்ற கணக்கில் கோப்பையை வென்று தங்களை சொந்த மண்ணில் வலுவான அணி என்பதை உலகிற்கு மீண்டும் நிரூபித்தது.

மறுபுறம் பஸ்பால் அணுகுமுறையை பின்பற்றி சாதிப்போம் என்று சொன்ன இங்கிலாந்து பென் ஸ்டோக்ஸ் தலைமையில் முதல் முறையாக ஒரு தொடரில் தோல்வியை சந்தித்து தலை குனிந்தது. இந்நிலையில் இந்த தொடரில் தங்களின் பரம எதிரி இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததை பார்ப்பது மகிழ்ச்சியாக இருப்பதாக முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் டிம் ஃபைன் வெளிப்படையாக கூறியுள்ளார்.

- Advertisement -

இந்தியா பி டீம்:
மேலும் விராட் கோலி, ஷமி, ராகுல், பண்ட் போன்ற முக்கிய வீரர்கள் இல்லாத இந்தியா பி அணியிடம் இங்கிலாந்து தோல்வியை சந்தித்ததாக மற்றொரு முன்னாள் ஆஸ்திரேலிய வீரர் பிராட் ஹாட்டின் தெரிவித்துள்ளார். இது பற்றி சமீபத்திய பேட்டியில் அவர் பேசியது பின்வருமாறு. “இந்த தொடரில் பென் ஸ்டோக்ஸ் அபாரமாக செயல்பட்டதால் அவரை குறை சொல்ல முடியாது. இந்திய துணைக் கண்டத்தில் கடினமான சூழ்நிலைகளில் இங்கிலாந்து இளம் ஸ்பின்னர்களை கொண்டிருந்தது”

“அந்த சூழ்நிலையில் டாம் ஹார்ட்லி, ரீஹன் அஹ்மத், சோயப் பஷீர் ஆகியோர் நன்றாகவே செயல்பட்டனர். பென்ஸ் ஸ்டோக்ஸ் அதற்கான பாராட்டுக்குரியவர். ஆனால் இந்த தொடரில் அவர்கள் இந்தியா பி அணிக்கு எதிராகவே விளையாடினர். ஏனெனில் விராட் கோலி, ஷமி இல்லை. பும்ரா கடந்த போட்டியில் ஓய்வு எடுத்தார். கேஎல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோரும் இல்லை. அந்த வகையில் வலுவான இந்தியா வலுவாக இல்லை. இருப்பினும் இது இந்திய கிரிக்கெட்டின் ஆழத்தை காண்பிக்கிறது”

- Advertisement -

“இந்திய கிரிக்கெட்டுக்கு அடுத்த சகாப்தத்தில் ரன்கள் அடிப்பதற்கு பெரிய பெயர்கள் வந்துள்ளன. ஜெய்ஸ்வால் முன்னின்று அசத்தும் நிலையில் ஜுரேல் கடந்த போட்டியில் அபாரமாக விளையாடினார். எனவே இந்தியா வலுவான அணியாக இருக்கிறது” என்று கூறினார். அதே நிகழ்ச்சியில் இது பற்றி டிம் ஃபைன் பேசியது பின்வருமாறு. “ஹாடின் சொன்னதை நான் ஏற்றுக்கொள்கிறேன். இந்தியா பி அணியிடம் தோல்வியை சந்தித்த உணர்வு பற்றி 2020/21 பார்டர் – கவாஸ்கர் கோப்பையில் எனக்கு தெரியும். துரதிஷ்டவசமாக அது எங்களுடைய சொந்த மண்ணில் நடந்தது”

இதையும் படிங்க: சதத்தை கூட கொண்டாடாமல் விளையாடிய கேப்டன் ரோஹித் சர்மாவிற்கு ஏற்பட்ட சோகம் – விவரம் இதோ

“ஆனால் இத்தொடரில் இந்திய அணியில் பெரிய வீரர்கள் இல்லாதது இங்கிலாந்துக்கு உதவி செய்திருக்க வேண்டும். இங்கிலாந்து விளையாடிய விதத்தை நான் விரும்புகிறேன். அவர்கள் தோல்வியை சந்திப்பதை நான் பார்க்க விரும்புகிறேன். இதை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். ஆனால் அவர்கள் பொழுதுபோக்கை ஏற்படுத்தும் வகையில் டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகின்றனர்” என்று கூறினார்.

Advertisement