பந்து எங்கே போனது என்று தேடிய போல்ட். கடைசியில் பந்து எங்க இருக்கு பாருங்க – விவரம் இதோ

Boult
- Advertisement -

இலங்கை சென்றுள்ள நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்று விளையாடி வருகிறது. இதில் முதல் டெஸ்ட் போட்டி தற்போது காலேவில் நடந்து வருகிறது.

Southee 2

- Advertisement -

இந்த போட்டியில் முதலில் ஆடிய நியூஸிலாந்து அணி முதல் இன்னிங்ஸ் முடிவில் 249 ரன்கள் குவித்தது. அதன்பின் இலங்கை அணி முதல் இன்னிங்சில் இரண்டாம் நாள் ஆட்ட நேர முடிவில் 227 ரன்கள் குவித்து இருந்தது.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் போது நியூசிலாந்து அணியின் வீரர் போல்ட் பேட்டிங் செய்யும்போது ஒரு விசித்திரமான நிகழ்வு ஏற்பட்டது. அதாவது போல்ட் இலங்கை அணியின் சுழற்பந்து வீச்சை ஸ்வீப் செய்ய முயன்றார். அப்போது பந்து பேட்டில் பட்டு அவருடைய ஹெல்மெட்டில் புகுந்தது. ஆனால் பந்து எங்கே சென்றது என்று தெரியாமல் திகைத்த போல்ட் கேட்ச் ஆகி விடுமோ என்று திரும்பித் திரும்பிப் பார்த்தார்.

Boult 1

ஆனால் பந்து அவருடைய ஹெல்மெட்டில் புகுந்தது. இதனைக் கண்ட இலங்கை வீரர்கள் அவரைப் பார்த்து சிரித்துக் கொண்டே அவரிடமிருந்து பந்தை வாங்குவதற்காக கிட்டேபோய் பந்து வெளியே எடுத்தனர். இதை கண்ட மைதானத்திலிருந்த ரசிகர்கள் சிரிப்பலையில் மைதானத்தை நிறைய செய்தனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement