ஓய்வுக்கு பிறகு தோனி நிச்சயம் பாஜக கட்சியில் இதற்காக இணைவார் – சஞ்ஜய் பஸ்வான்

Dhoni-1
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் மூத்த வீரரான மகேந்திர சிங் தோனி நடப்பு உலகக் கோப்பைத் தொடரோடு ஓய்வு பெறுவார் என்ற பேச்சு நீண்ட நாட்களாக இருந்து வருகிறது. இந்நிலையில் இந்திய அணி அரையிறுதி நியூசிலாந்து அணியுடனான போட்டியில் தோல்வியடைந்து தொடரை விட்டு வெளியேறியது.

Dhoni

- Advertisement -

இதனைத்தொடர்ந்து தோனி எப்போது வேண்டுமானாலும் ஓய்வு முடிவை எடுக்கக் கூடும் என கூறப்படுகிறது. ஏனெனில் அதிரடியாக தனது முடிவுகளை டோனி எப்போதும் எடுப்பார். எனவே விரைவில் அவர் ஓய்வு முடிவை அறிவிக்க வாய்ப்பு உள்ளது. இதனை அடுத்து பாஜகவின் மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான சஞ்சய் பஸ்வான் தோனி குறித்து கூறியதாவது :

தோனி ஓய்வுக்குப் பிறகு நிச்சயம் பாஜகவில் இணைவார். இதைப்பற்றி நெடுநாட்களாகவே பேசி வருகிறார். மேலும் தோனி கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பெற்றபின் தான் இதுகுறித்த முழு தகவல் தெரியும். மேலும் கட்சியுடன் இணைந்து செயல்படும் விதம் குறித்து தோனி முயற்சி எடுக்கிறார் எனவும் பஸ்வான் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முன்னதாக நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜக தலைவர் அமித் ஷா தோனியை சந்தித்து ஆதரவு கூறியது குறிப்பிடத்தக்கது.

dhoni 2

ஜார்கண்ட் மாநிலம் தலைநகரான ராஞ்சியை சேர்ந்தவர் தோனி. இந்த ஆண்டு இறுதியில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது. எனவே தோனியை பாஜகவில் இணைத்து தேசிய பணியாற்ற பாஜக அழைப்பு விடுக்க போவதாகவும், கட்சியின் நம்பிக்கையை பார்த்து பாஜகவில் இணைந்து தோனி நாட்டுக்காக தொண்டாற்ற கடமைப் பட்டிருப்பதாகவும் பாஜக எதிர்பார்ப்பதாக தெரிகிறது. ஏற்கனவே தோனி ஓய்வுக்கு பின் ராணுவத்தில் பணியாற்ற விருப்பம் இருப்பதாகவும், ஓவியத்தில் ஈடுபாடு இருப்பதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement