இந்திய அணிக்கெதிரான இந்த டெஸ்ட் போட்டியே எனது வாழ்வின் கடைசி போட்டி – ஓய்வை அறிவித்த நியூசி வீரர்

Watling
- Advertisement -

இந்தியா மற்றும் நியூசிலாந்து ஆகிய அணிகளுக்கு இடையேயான, உலக டெஸ்ட் சாம்பியின்ஷிப் இறுதிப் போட்டி இங்கிலாந்தில் உள்ள சௌத்தாம்ப்டன் மைதானத்தில் ஜூன் மாதம் 18 ஆம் தேதி நடக்க இருக்கிறது. இந்த இறுதிப் போட்டி முடிந்தவுடன் அனைத்து விதமான கிரிக்கெட் தொடர்களில் இருந்தும் தாம் ஓய்வு பெறப்போவதாக அறிவித்திருக்கிறார் நியூசிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன்னா பிஜெ வாட்லிங். தனது ஓய்வு குறித்து அவர் அறிவிக்கும்போது, நான் ஓய்வு முடிவை அறிவிப்பதற்கு இதுவே சரியான நேரம் என்று நினைக்கிறேன்.

watling 2

- Advertisement -

நியூசிலாந்திற்காக டெஸ்ட் கிரிக்கெட் விளையாடியதை மிகப் பெரிய கௌரமாக எண்ணுகிறேன். வெள்ளை நிற உடை அணிந்து கொண்டு மற்ற வீரர்களுடன் சேர்ந்து விளையாடியது என்னுடைய வாழ்க்கையில் என்றுமே மறக்க முடியாத தருணமாக அமைந்துள்ளது. டெஸ்ட் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற பிறகு, நான் நிச்சயமாக சில நல்ல தருணங்களை தவிர்க்கப் போகிறேன் என்று எனக்குத் தெரியும். குறிப்பாக ஐந்து நாட்கள் டெஸ்ட் போட்டி விளையாடிவிட்டு, கடைசி நாளின் மாலைப் பொழுதில் மற்ற வீரர்களுடன் சேர்ந்து உணவு உண்பதை நிச்சயமாக நான் இழப்பேன் என்று அவர் கூறினார்.

பிஜெ வாட்லிங்கிற்கு தற்போது தான் இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது. அதையும் குறிப்பிட்டு பேசிய அவர், இனிவரும் காலங்களில் என் மனைவி மற்றும் இரண்டு குழந்தைகளுடனும் அதிகமான நேரத்தை செலவிடுவதாக உள்ளேன். என்னுடைய கிரிக்கெட் வாழ்க்கையில் நிறைய நண்பர்களை நான் பெற்றுள்ளேன். உலகத் தரம் வாய்ந்த பல வீரர்களுடன் இணைந்து கிரிக்கெட் விளையாடியுள்ளேன். அவர்களின் மூலமாக எனக்கு நிறைய உதவிகளும் கிடைத்தன, நான் எப்போதும் அதற்காக நன்றியுடையவனாக இருப்பேன் என்று அவர் கூறினார்.

பிஜெ வாட்லிங் நியூசிலாந்து அணிக்காக 73 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 3773 ரன்களை எடுத்துள்ளார். மேலும் 28 ஒரு நாள் போட்டிகளிலும் ,5 டி20 போட்டிகளிலும் நியூசிலாந்து அணிக்காக விளையாடியுள்ளார். அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் சிறந்த போட்டி என்பது, இந்தியாவிற்கு எதிரான போட்டியாக இருக்கிறது. அப்போட்டியில் பிரெண்டம் மெக்கல்லமுடன் இணைந்து அற்பதமான பார்டனர் ஷிப் அமைத்த வாட்லிங், அந்த போட்டியில் 124 ரன்கள் அடித்ததோடு மட்டுமல்லாமல் நியூசிலாந்து அணியை தோல்வியிலிருந்தும் காப்பாற்றினார்.

watling 1

தற்போது இந்தியாவுக்கு எதிரான போட்டியையே அவருடைய கிரிக்கெட் வாழ்க்கையின் கடைசி போட்டியாக இருக்க வேண்டுமென்று அவர் முடிவு செய்துள்ளார். அவரது கடைசி டெஸ்ட் போட்டி இதுவே என்பதால் கிரிக்கெட் ரசிகர்கள் அவருக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement