அம்பயருக்கே கிச்சுகிச்சு மூட்டிய ஜடேஜா.. 55 பந்து பேராசை எனக்கில்ல.. ஹாரி ப்ரூக்கிற்கு ரிஷப் பண்ட் பதிலடி

Rishabh Pant Harry Brook
- Advertisement -

இந்தியா இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகிறது. அத்தொடரின் முதல் போட்டியில் வென்ற இங்கிலாந்து ஆரம்பத்திலேயே முன்னிலை வகிக்கிறது. 2வது போட்டி ஜூலை இரண்டாம் தேதி பர்மிங்கம் நகரில் துவங்கியது. அதில் முதலில் விளையாடிய இந்தியா 587 ரன்கள் குவித்தது. அதிகபட்சமாக கேப்டன் சுப்மன் கில் 269, ரவீந்திர ஜடேஜா 89, ஜெய்ஸ்வால் 87, வாசிங்டன் சுந்தர் 42 ரன்கள் குவித்தார்கள்.

இங்கிலாந்துக்கு அதிகபட்சமாக சோயப் பஷீர் 3 விக்கெட்டுகளை சாய்த்தார். அடுத்ததாக விளையாடிய இங்கிலாந்தை சிறப்பாக பவுலிங் செய்த இந்தியா 407 ரன்களுக்கு சுருட்டி 180 ரன்கள் முன்னிலையாகப் பெற்று அசத்தியது. அதிகபட்சமாக ஜேமி ஸ்மித் 184*, ஹாரி ப்ரூக் 158 ரன்கள் எடுத்தனர்.

- Advertisement -

பேராசை எனக்கில்ல:

இந்திய அணிக்கு முகமது சிராஜ் 6, ஆகாஷ் தீப் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர். அதைத்தொடர்ந்து களமிறங்கிய இந்தியா மீண்டும் அபாரமாக விளையாடின 426/7 ரன்கள் குவித்து டிக்ளேர் செய்வதாக அறிவித்தது. அதிகபட்சமாக கேப்டன் கில் மீண்டும் சதமடித்து 161, ஜடேஜா 69*, ரிஷப் பண்ட் 65, ராகுல் 55 ரன்கள் எடுத்தார்கள். இறுதியில் 608 ரன்களை துரத்தும் இங்கிலாந்து 4வது நாள் முடிவில் 3 விக்கெட்டுகள் இழந்து தடுமாறி வருகிறது.
முன்னதாக இப்போட்டியில் 4வது நாளில் ரிஷப் பண்ட் அதிரடியாக விளையாடினார். ஒருமுறை அவரது கையிலிருந்து பேட் தவறி காற்றில் பறந்தது. அந்தளவுக்கு அதிரடியாக விளையாடிய அவரின் கவனத்தை சீர்குலைக்கும் நோக்கத்தில் இங்கிலாந்து வீரர் ஹாரி ப்ரூக் ஸ்லிப் பகுதியில் நின்றுக்கொண்டு இன்னும் வேகமாக அடியுங்கள் என்று சொன்னார்.

ஜடேஜாவின் கிச்சுகிச்சு:

இது பற்றி அவர்களுக்கிடையே நடந்த உரையாடல் பின்வருமாறு.
ப்ரூக்: உங்களுடைய வேகமான சதம் என்ன?
பண்ட்: டெஸ்ட் கிரிக்கெட்டிலா? 80 – 90 பந்துகள்
ப்ரூக்: நான் 55 பந்துகளில் வேகமான சதம் அடித்துள்ளேன். நீங்களும் அதை இன்று செய்யலாம்
பண்ட்: பரவாயில்லை. நான் சாதனைகளுக்காக பேராசைப்படவில்லை. அது நடந்தால் நடக்கட்டும்

- Advertisement -

அதாவது 55 பந்துகளில் சதத்தை அடிக்குமாறு ரிஷப் பண்ட்டை உசுப்பி விட்டு விக்கெட்டை எடுக்க ஹாரி ப்ரூக் முயற்சித்தார். ஆனால் அந்த வலையில் விழாத ரிஷப் பண்ட் சொன்ன பதில் ஹாரி ப்ரூக்கை புன்னகைக்க வைத்தது. அதே போல 4வது நாள் மாலை வேளையில் 30/2 என இங்கிலாந்து விளையாடிக் கொண்டிருந்தது.

இதையும் படிங்க: 430 ரன்ஸ்.. பிரைன் லாரா, சங்ககாராவை முந்திய கில்.. 2 சரித்திர சாதனையுடன்.. யாரும் செய்யாத உலக சாதனை

அப்போது ஒரு தருணத்தில் நியூஸிலாந்து அம்பயர் கிரிஸ் ஃகேப்னி பெய்ல்ஸை வைத்துக் கொண்டிருந்தார். அவரிடம் சென்ற ஜடேஜா ஏதோ பேசினார். அதற்கு அம்பயரும் ஏதோ சொன்னார். அதனால் சிரித்த ஜடேஜா அம்பயருக்கு கிச்சு கிச்சு மூட்டி விட்டு. “நான் ஏமாற்றுகிறேனா?” என்று சொல்லி விட்டு சென்றது ஸ்டம்ப் மைக்கில் பதிவானது.

Advertisement