ஈஸியா தோத்தது மட்டுமின்றி மோசமான சாதனைக்கும் ஆளான இந்திய அணி – விவரம் இதோ

IND
- Advertisement -

உலக கிரிக்கெட் ரசிகர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நடப்பு 2026 டி20 உலககோப்பை தொடரானது தற்போது சூப்பர் 8 சுற்றுக்குள் நுழைந்துள்ளது. அந்த வகையில் நேற்று நடைபெற்ற சூப்பர் 8 சுற்றின் முக்கிய ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய அணிகள் நேற்று பிப்ரவரி 22-ஆம் தேதி அகமதாபாத் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் டாசில் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்கா அணி முதலில் பேட்டிங் செய்வதாக அறிவித்தது.

இந்திய அணி நிகழ்த்திய மோசமான சாதனை :

அதனை தொடர்ந்து முதலில் விளையாடிய தென்னாப்பிரிக்க அணியானது இந்திய அணியின் பந்துவீச்சை மிகச்சிறப்பாக எதிர்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 187 ரன்களை குவித்தது. இந்த போட்டியில் தென்னாப்பிரிக்க அணி சார்பாக அதிகபட்சமாக டேவிட் மில்லர் 63 ரன்களையும், டேவால்டு பிரேவிஸ் 45 ரன்களையும் குவித்து அசத்தினர்.

- Advertisement -

பின்னர் 188 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இந்திய அணியானது தென்னாப்பிரிக்க அணியின் சிறப்பான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 111 ரன்களை மட்டுமே குவித்தது. அதன்காரணமாக தென்னாப்பிரிக்க அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் அசத்தலான வெற்றியை பெற்றது. இந்திய அணி அடைந்த தோல்வி ரசிகர்கள் மத்தியில் ஏமாற்றத்தை அளித்திருந்தது.

இந்நிலையில் நேற்று நடைபெற்ற இந்த போட்டியில் அடைந்த தோல்வியின் மூலம் இந்திய அணி மிக மோசமான சாதனை ஒன்றிற்கும் ஆளாகியுள்ளது. அதுகுறித்த தகவல் வெளியாகி அனைவரது மத்தியிலும் கவனத்தை ஈர்த்து வருகிறது. அந்தவகையில் இந்திய அணி நிகழ்த்திய மோசமான சாதனை யாதெனில் : தென்னாப்பிரிக்க அணிக்கு எதிராக இந்திய அணி 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது.

- Advertisement -

இதையும் படிங்க : இந்திய அணிக்கு எதிராக நாங்கள் பெற்ற இந்த அசத்தலான வெற்றிக்கு காரணம் இதுதான் – எய்டன் மார்க்ரம்

இதன்மூலம் டி20 உலககோப்பை போட்டிகளில் மிகப்பெரிய வித்தியாசத்தில் இந்திய அணி அடைந்த மோசமான தோல்வியாக இந்த தோல்வி மாறியுள்ளது. இதற்கு முன்னதாக இந்திய அணி கடந்த 2010 ஆம் ஆண்டு ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 49 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்திருந்தது. மேலும் ஒட்டுமொத்தமாக டி20 போட்டிகளில் இந்திய அணி அடைந்த இரண்டாவது மோசமான தோல்வியாக இந்த தோல்வி பதிவாகியுள்ளது.

Advertisement